பொன் வண்டு எழுந்து எழுந்து எழுந்து என காரின் டேப்ரெக்கார்டர்
ஓட்டை வாயால் பேசியது. முத்து மாமா சொன்னார். அக்கா பார்த்திட்டே இருங்க. அடுத்தடுத்த
வரியும் இப்படித்தான் பத்துத் தடவையாவது பாடும். பாட்டுப் பூராவுமே இப்படித்தான். சொல்லி வாய் மூடுவதற்குள் பூந்தேனில் கலந்து கலந்து
கலந்து தொடர்ந்து அடுத்தடுத்த வரிகளும் இப்படியே சிரிப்புக்குப் புரையேறிப்போனது.
முத்துமாமாவின் திட்டம் மெட்ராஸ், திருத்தணி, திருப்பதி,
காஞ்சிபுரம், பிறகு ஊருக்குத் திரும்ப என்று. ஆயிற்று. மெட்ராசில் வள்ளுவர் கோட்டம்,
அண்ணா சமாதி, பாம்புப்பண்ணை, அடையாறு ஆலமரம், கபாலி கோயில், ராதா சில்க் எம்போரியம்.
எல்லாம் பார்த்தாயிற்று.
அடுத்துத் திருத்தணி புறப்பாடு. சாமி பார்த்து தரிசனம் பண்ணி
மாலை அபிஷேகம் அர்ச்சனை சந்தனக் காப்பு என்று
ப்ரம்மாதப்படுத்திட்டுத்தான் புறப்பட்டார் மாமா.
***********************************************
மனசுக்குள் எந்தக் காரியத்திலேயும் ஒரு பயத்தோட ஈடுபடுறவந்தான் மென்மையானவனா இருக்கான். அந்தப் பயமே அவனை சிந்திக்க வைக்குது. இரக்கமுள்ளவனா ஆக்குது.
--- அரைகுறை சிறுகதை.. 85 ஆம் வருட டைரி.
***********************************************
மனசுக்குள் எந்தக் காரியத்திலேயும் ஒரு பயத்தோட ஈடுபடுறவந்தான் மென்மையானவனா இருக்கான். அந்தப் பயமே அவனை சிந்திக்க வைக்குது. இரக்கமுள்ளவனா ஆக்குது.
--- அரைகுறை சிறுகதை.. 85 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))