பறந்து
பறந்து
சலித்துவிட்டது.
இதமாய்
உட்கார
ஒரு
கிளைகூட இல்லை
மேகமலைகளை
உடைத்துப்
போட்டாயிற்று
பரந்த
நிலத்தைக்
குதறிப்
போட்டாயிற்று
பௌர்ணமியை
நட்சத்திரங்களாய்ச்
சிதறியாகிவிட்டது.
கடலைக்
குடல்
பிளத்திப்
போட்டாயிற்று.
ஐயோ
களைத்து அமர
ஒரு
பரண்கூட
ஒரு
இலை கூட இல்லை
கூட்டத்தைப்
பிரிந்து
திசை
தடுமாறி
எல்லா
லோகமும்
அலைந்தாயிற்று
இப்போது
அந்தப்
பழைய்ய்ய
உறவுகள்
ஆதரவுகள்
வேண்டுமே.
எங்கோ
ஏதோ
ஒரு
யுகத்தின்
ஏதோ
ஒரு மரத்தில்
ஏதோ
ஒரு மரப்பொந்துக்குள்
பதுக்கி
வைத்த வீடு
எங்கே
போயின
அத்தனை
மரங்களும்
இறக்கைகள்
இறைஞ்சுகின்றன.
மௌனித்து
அமர
ஒரு
காய்ந்த சுள்ளி கூட இல்லையே.
-- 84 ஆம் வருட டைரி.
-- 84 ஆம் வருட டைரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))