எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 ஜனவரி, 2016

நினைவுப் புகைக் கூண்டுநினைவுப் புகைக் கூண்டுக்குள்
காற்றுக் க்ரீடை செய்வோம்
வா.
மனநுனிகள் புகையடிக்காமல்
வெய்யில் சுறா கடிக்க வருமுன்
சீக்கிரமாய்
சீக்கிரமாய்
முகங்கள்
புன்னகைப் பனிக்குள்
உறைந்திருக்கும்போதே
புகைச் சுழலுக்குள்
ஸ்நேகமாய் ஒருதரம்
முங்குவோம் வா
மந்தைகளின்
கொம்புகளுக்கும்
கூர்பற்களுக்கும் நாம்
யாவதற்குமுன்
தடம்பார்த்து
நமக்குரிய வண்டிகள்
பிடிப்போம் வா
தார்மீகக் காரணங்கள்
ஆராய்ந்து
ஒற்றுமைகள் புலப்படுத்தி
ஒன்றாய்க் கரை சேருவோம்
வலை மீளுவோம் வா
மழையின் அவசரமாய்
சாகரத்தின் தாகமாய்
சீக்கிரம்
சீக்கிரம்.

-- 85 ஆம் வுடைரி 

புதன், 20 ஜனவரி, 2016

வாழ்க்கை:-வாழ்க்கை:-

ரோட்டோரம் பூராவும்
தென்னை மரங்கள்
பூக்களில்லை
மரங்களில்லை
செடிகளில்லை
கொடிகளில்லை
நிழலுக்குதவாமல்
தனிமைப் படுத்திக்கொண்ட
பங்களாக்கள் போல்
உயரத்தில் தலை வைத்து
முகம் வான் மல்லாத்தி
சாலையின் செருக்குகளாய்
அணை கரையென்ற
தளைகளைத் தகர்த்து/
தளைகளுக்குள் தங்கி
சாலைக் கரையின்
உணர்ச்சியற்ற
உருவக் குச்சிகளாய்த்
தென்னைகள்.
வெய்யில் வளைத்த
அடைப்புக்குறிகளாய்
சஹாராவின்
நாடோடி யாத்ரிகர்களாய்/
திமில் நீர் சேர்த்த
நிமிர்ந்த ஒட்டகங்களாய்
வளைந்து குனிந்து
அலைந்து அலைந்து
தென்னைகள் தென்னைகள்.

-- 85 ஆம் வுடைரி

ஸ்நேக ஊசிகாகிதங்களைப் பூக்களாக்கி
கவிதை நூலில்
ஸ்நேக ஊசியால் கோர்த்துப்
ப்ரசுரித்துக்கொண்டிருந்தேன்.

--85 ஆம் வுடைரி. 

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

அபிஷேகம்அபிஷேகம் நடந்தது
ஆஞ்சநேயருக்கு
பாலால் தேனால்
எங்களுக்கும்
வெய்யிலால்.
டெரசின் கீழ்
ஏசிப் படுதாவுக்குள்
அனுமார் அமர்ந்திருக்க
வெளிச்சப் படுதா
எங்களுக்கும்.

-- 86 ஆம் வருட டைரி.

வெள்ளி, 15 ஜனவரி, 2016

சபித்தல்கொசுக்களும்
கொசுவலையும்
நண்பர்கள்.
போர்வையையும்
ஃபேன் காற்றையும்
சபித்தன

-- 80 ஆம் வருட டைரி. 

Related Posts Plugin for WordPress, Blogger...