எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 20 பிப்ரவரி, 2020

பதைபடிவம்.

ஒரு இறகு
ஒரு மைக்கூடு
கூர்ந்து நோக்கும் கண்ணாடி
எல்லாவற்றையும்
எப்படி மாயமாக்கினாய்.
நட்பு ரேகைகளின்
கிளைகள் விரிய
வேரோடிப் புதைந்திருக்கும்
ஆணிவேர் பதைபடிவமாய்
உறைந்திருக்கிறது.

  

சனி, 15 பிப்ரவரி, 2020

விதியின் வாதை எழுத்துக்கள்.

இறகைப்போல
இலையைப்போல
உதிர விரும்பும் கனவுகள்.
ஒளியைப் போல
வளியைப் போலக்
கரைந்து விடும் ஆசைகள்.
நெருப்பில் எரிந்து
நீரில் கரைந்து
மண்ணுள் புகும் ஏக்கங்கள்.
நெற்றியின் மேலோ
உச்சந் தலையிலோ
விதியின் வாதை எழுத்துக்கள்.
  

திங்கள், 10 பிப்ரவரி, 2020

ஸ்க்ரீன் சேவர் சிறை.

கோவில் கோவிலாய்ப் போய்
சாமி பார்த்துக் கொண்டிருந்தேன்.
வீட்டுள் சிறைவைக்க இப்போது சாமி
என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
நானோ கைபேசியைப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
எப்போது ஸ்வைப்பினாலும்
ஸ்க்ரீன் சேவரில் ஒளிந்து விரிந்து சிரிக்கிறார்
  

புதன், 5 பிப்ரவரி, 2020

அதன் போக்கில்..

அதன் போக்கில் ஓடிக்கொண்டிருந்த
ஒரு கரப்பான் பூச்சியைக் கொன்றேன்.
அப்படியே மஞ்சள் தூள் தூவி
ஒரு எறும்பு வரிசையையும்.
எலிக்குச் சில இனிப்பு மாத்திரைகள்.
அங்கங்கே சில வெங்காயத் தோல்கள்
வால் சுழற்றும் பல்லிகளுக்காய்
காந்திக் கொண்டிருக்கிறது.
கணநேரமும் கொசுவிரட்டி.
சமையலறைக் கிருமிகளை
ஒழித்துவிட்டதாய்ப் பெருமிதம் கொள்ள
பலாப்பழத்திலிருந்து மூச்சைப் பிடித்துக் கொண்டு
சுற்றத் தொடங்குகிறது ஒரு ஈ.
மயிர்க்கூச்செறிய தப்பிக்கும் அதனோடு
மட்டையாடிக் கொண்டிருக்கிறேன்.
  
Related Posts Plugin for WordPress, Blogger...