எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 மே, 2014

தாய்மை:-தாய்மை:-
==========
மழை பொழிந்தது
கட்டிடங்கள்
கட்டிடங்கள்
கட்டிடங்கள் வழித்து.. 

கற்கள் வெறுமே நின்றன..
மழை சலித்துச் சுருண்டது

புழுதி தின்று, வெய்யில் வெறித்து
எரிந்தன கட்டிடங்கள்

மழை வந்தது பார்த்தது
மறுபடி பொழிந்தது.

சனி, 24 மே, 2014

தீவிர கம்யூனிஸ்ட் :-தீவிர கம்யூனிஸ்ட் :-

நான் ஒரு தீவிர கம்யூனிஸ்ட்
ஜேபியில் 
சில்லறை இல்லாத போது.

வெள்ளி, 23 மே, 2014

ஸ்நேகம்ஸ்நேகம்:-
==========
மண்ணின் இறுக்கம் தூர்த்து
உடல் நெளித்து
தன்னை வெளிப்படுத்தி
ஊர்ந்து போகும் புழு.

வெள்ளி, 16 மே, 2014

இதற்கு என்ன பெயர்?
இதற்கு என்ன பெயர்?
====================

ஆகாயப் பாத்திகளில்
மேகப் புற்கள்
பூத்து நிற்கும்.
இழை பிரியாத
பட்டு மௌனமாய்
இந்த உணர்ச்சிக்கு
என்ன பெயர் ?

0    0   0

இன்று புதிதாய்ப் பிறந்தோமோ?
மனம் ஞாபக மட்டைகள் சேர்க்கும்.

0    0     0

கர்ப்பக்ரகத்தின்
எண்ணெய்க் கலங்கல்களுக்குள்
கீற்று வெளிச்சத்துக்குள்
நிற்குபோது
எங்கெங்கும் வியாபித்து நிற்கும்
கற்பூர வாசமாய்
இந்தச் உணர்ச்சிக்கு என்ன பெயர்.
சுருதி கலையாத
செவிட்டு ராகமாய் அலையும்
இந்த ஸ்வரத்துக்கு என்ன பாஷை?
இந்தத் தேடலுக்கு
என்ன ஆதாரம்.?

0   0   0

மார்கழி விடியலில்
வெப்பம் பூசுதலாய்
ன்னுள் உனக்காய்
மனவோரம் மட்டும்
பார்டர் கட்டாமல்
முழுதும் பொங்கும்
குலுங்கும் ப்ரிய மரங்கள்

0       0        0

இனம் தெரியாத
இந்த ஒளி ப்ரஸவிப்பது-
மகிழ்ச்சி வெள்ளம்

0      0        0

முகம் தெரியாத
புதிய ஸ்நேகம்
பூத்தெளிப்பது
பாரிஜாத மலர்கள்..
இந்தக் காகித
பாரிஜாத மலர்கள் தான்!.


Related Posts Plugin for WordPress, Blogger...