எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 24 பிப்ரவரி, 2016

நாற்றுகள்



இனிய கவிதை
நாற்றுகள் என்னுள் மலர்ந்தன

பிரிய விதைகளை என்னுள் தூவிய
ஸ்நேகித்க்கு வணக்கம்.

பொங்கல் பானைக்கீழ்
புகையும் கங்குகளாய்
உனக்கான என் நேசங்கள்
நீறுபூத்துக் கிடக்கும்.

ட்பின் வண்ணங்காய்
பசிய கரும்புகள்
தோகைவிரித்தாடும்.


-- 85 ஆம் வுடைரி. 


செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

கைத்தடி.



அனுபவங்கள் காலடியில்
தானாய்ச் சேரும்.
மனத்தோரம் புஷ்பிக்கும்
இனிய கவிதை போல

பூக்கள் காய்களாகி, கனிகளாகி விதைகளாகி
இது அனுபவத்தின் வாழ்க்கை வரலாறு.

அனுபவத்தின் மொத்த உருவமே
சுருங்கின கன்னமும்
முதுமையும்தானோ

அனுபவத்தின் விரல்களில்
ஏன் கைத்தடி. ?
ஓ. அதற்கு நடந்து சென்று
அனுபவமில்லையோ.?

-- 85 ஆம் வுடைரி 

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

பௌர்ணமி :- நான் விரும்பும் கவிஞன்.

நான் விரும்பும் கவிஞன்:-

தீஞ்சுவைப் பாலெடுத்து
நறுஞ்சுவைத் தேன் கலந்து
பழச்சாறும் ஊற்றிக் கொடுத்தாலும்
புளிக்குதென்பேன்
கவிஞன் கண்ணதாசனின்
தமிழ்ப் பால் குடித்து வளர்ந்த காரணத்தால்.

உணர்ச்சிகள் அனைத்திற்கும்
உரையெழுதியவன்
வாழ்வைக் கவிதையாக்கினவன்
கவிதையை வாழ்கையாக்கினவன்

அவனின் சொற்துப்பலில்
ஊர்களின் பெயர்கள் கூட
வாழ்க்கையின் வரைபடம் காட்டும்

கவிதைக் கூட்டில்
அவனொரு இராணித் தேனி

அவனொரு வித்யாசமான
வானவில்

சிவப்பும் பசுமையும்
நிர்மலமும்
கவிச்செருக்கும் காதலும்
அடக்கமும்
அவனுள்ளும்
அவன் கவிக்குள்ளும் அடக்கம்

மனவாசத்தையும்
வனவாசத்தையும்
ஒருங்கே காட்டின
முரண்பாடு அவன்.

நதியின் ஓட்டத்தோடு
செல்வதே சிறுமீன்களின்
பண்பாயிருக்க
எதிர்நீச்சல் போட்ட
சுறாமீன் இவன்

முகஸ்துதி பாடுவதே
முதல் ஆகக் கொண்ட
மனனக் கவிஞர்களுள்
அடிபணியாத
ஆசு கவி இவன்

இன்றைய கவிஞர்கள்
இசைக்கென
எழுத்தைக் கோர்க்க
கவிப்பிரவாகத்தில்
இசையைக் கூட்டியவன் இவன்

எழுத்துலக வானில்
இவனொரு இராஜாளி

இவன் வளர்தலும்
தேய்தலும் இல்லாத
நிரந்தர சித்ரா பௌர்ணமி.

-- 84 ஆம் வருட டைரி. 

மனச்சிறுமி.



நம்மையெனத் தன்மை கூறியது
தன்னையும் கடவுளையும் சேர்த்து

பார்வைக் கந்தைகளை
மனச்சிறுமி பொறுக்குவாள்.
மீன்குஞ்சுகள்
முத்துப் படுகைக்குள் நீந்தும்.
மனச்சிலாகை பெயர்ந்து
நிகழ்வின் விரல்களில்
மாட்டிக்கொண்டு தவிக்கும்.
பஜனை சாமியார்கள்
நரம்புதளரக் கத்தும் மார்கழி
குரல்களையும் சுண்டல்களையும்
கோயில் விநியோகிக்கும்
ப்ரகார மூலையோரம்
பார்வைக் கந்தல் போர்த்தும்
மனச்சிறுமி.

-- 85 ஆம் வருட டைரி.

சனி, 20 பிப்ரவரி, 2016

அமைதி ( அ ) விடை:-




அமைதி ( அ ) விடை:-

 
குரங்கு பிய்த்த பூ
சிதறிக் கிடக்கும்.
விளக்கின் பிடறிக்குப் பின்னால்
பல்லியாய் இருக்கும்.
தூரத்தில் வெடிக்கும்
எரிமலைகளிலும்
மழை சிதறும்.
வெளிச்சப் பாதுகை பார்த்து
தாமரை அகலிகைக் கல்லாய்
இறுகிக் கிடக்கும்.
கிளைகள் இலையோடு
பிணைந்து உதிர்ந்து போகும்.

-- 85 ஆம் வுடைரி 

Related Posts Plugin for WordPress, Blogger...