நம்மையெனத்
தன்மை கூறியது
தன்னையும்
கடவுளையும் சேர்த்து
பார்வைக்
கந்தைகளை
மனச்சிறுமி
பொறுக்குவாள்.
மீன்குஞ்சுகள்
முத்துப்
படுகைக்குள் நீந்தும்.
மனச்சிலாகை
பெயர்ந்து
நிகழ்வின்
விரல்களில்
மாட்டிக்கொண்டு
தவிக்கும்.
பஜனை
சாமியார்கள்
நரம்புதளரக்
கத்தும் மார்கழி
குரல்களையும்
சுண்டல்களையும்
கோயில்
விநியோகிக்கும்
ப்ரகார
மூலையோரம்
பார்வைக்
கந்தல் போர்த்தும்
மனச்சிறுமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))