தேவதை
தெய்வம்
முயல்குட்டி
கோழிக்குஞ்சு
பூம்பாவை
தேன்சோலையவள்
தேவன்
சாமி
கந்தர்வன்
காதலன்
அன்பன்
கருணைக்காரனவன்
அவள்
யட்சிணியாகும்போது
யட்சனாக
காளியாகும்போது
கருப்பனாக,
வேட்டைக்காளியாகும்போது
சுடலைமாடனாக
முருதாடியாகும்போது
ராட்சசனாக
ரூபம்
எடுக்கிறான் அவனும்.
ராட்சசம்
ஆடிப் போரிட்டுமுடிந்து
சாந்தமாகும்
இருவரிடத்தும்
அதே
ராட்சச வேகத்தில்
தெய்வமும்
புகுந்துகொள்கிறது
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))