எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 ஜூலை, 2015

நட்பின் டைரி.பச்சைவயல்கள், பவானி ஆறு, பிஞ்சு பாதம் தரை பட்டு – சிஷ்யை- ஏகலைவனி, - நீல மலைகளும். எங்க ஊர் ராசாத்தி, இங்கேயும் ஒரு கங்கை, தூறல் நின்னு போச்சு, முந்தனை முடிச்சு, தாவணிக் கனவுகள் – இண்டர்வியூ , பட்டுச்சேலை, மண்ணுக்கேத்த பொண்ணு, முள்ளில்லா ரோஜா, இளங்கன்று மிடில்ஸ்.


>>>>>>>>>>>> 

வாசுகி
நிர்மலா
கீதா
ஜூலை 2.7.61.
மே. 3, 1991.
5 ½ அடி
ஒல்லியாய் இதுதான்.

>>>>>>>>>>>>>> 


6 பேப்பரில் 4 இல் வெற்றி
மீதி இரண்டு.
ஆசிரியர் குறும்பு.

>>>>>>>>>>> 

சினிமா
உதயகீதம்
காக்கிச் சட்டை.

>>>>>>>>>>>> 


அம்மாவின் வாழ்த்துப்பா - 1. ராமு மாமா திருமண வாழ்த்து.

                                              சிவமயம்.
இல்லறம் தழைக்க ! வள்ளுவம் வாழ்க ! இன்பம் செழிக்க !

மணமன்ற வாழ்த்து மடல்

மணமகன்                                           மணமகள்
ராமனாதன்                                         சகுந்தலா.


முத்தமிழும்  முக்கலையும் மூவேந்தர் காத்தநாட்டில்
சித்தப்பா!        மேலும் நீர்        ஸர்.சி.வி.  ராமன்போல்
விஞ்ஞானம் கற்றுணர்ந்து    மேலான   வாழ்வுபெற்று
அஞ்ஞானம்  நீக்கி                     அறங்கள்  பல செய்து
சித்தி                சகுந்தலையின் சேவை     துணைக்கொண்டு
அன்பறிவு      ஆற்றல்               அருமை    பொறுமையுடன்
இன்சொல்      நிறைந்த            இளஞ்சிறாஅர் தான்பெற்று
பத்தினியாள் கைபற்றிப்         பாரில்          புகழுடனே
தித்திக்கும்      நல்வாழ்வு        சித்திக்க      வேண்டுகின்றோம். 

காரைக்குடி                                சுப. வள்ளியப்பன் சகோதரர்கள்.
5.7.71.                                              சுப. முத்து சகோதரிகள்.

வியாழன், 30 ஜூலை, 2015

விடுதி மழை.

கோடை மழை
கொள்ளைப் ப்ரியம்
விடுதியின் ஜன்னல்களை
நீர்விரல்களால் தட்டி
வெளியே அழைக்கிறது அது

வெக்கை பிறக்கும் பூமி
பாதத்தைக் கதகதப்பாக்க
நாசி நிறைகிறது
மண் தூர்த்த மணம் இழுக்க
நனையாதேயெனத் தடுக்கத்
தாயில்லை அருகில்.

நெற்றியின் உச்சியிலிருந்து
பொட்டுவைக்கத் துவங்கும் மழை
நெஞ்சக்குலை நடுங்க
ஈரமாய் ஊடுருவி
தாவாங்கட்டை அசையத்
தலைதுவட்ட அறையெங்கும்
ஈரமாய் உதிர்கின்றன நீர்ப்பூக்கள்.

மழைக்கு உணக்கையாய்ப்
பலகாரமும் தேநீரும்தரும்
அம்மாவின் நினைவுபொங்கக்
கண்கள் கசிந்து
கட்டிடத்தைச் சுற்றிஓடும்
மழைநீராய்க் கரைந்து ஓடுகிறது
ஊர் நோக்கி.

புதன், 29 ஜூலை, 2015

நட்பின் கவிதை -2இறுகிய
பாறைக்குள்ளும்
வேர்பரப்பித்
தகர்க்கும்
பூ மரம்.!

>>>>>>> 

சிறகடித்துப் பறக்கும்
வானம்பாடிகளுக்கு
சிலந்தி வலைகளா
சிறைகளாவது ?

>>>>>>>>>>>> 

முகங்களே அறியாமல்
முகிழ்த்த ஸ்நேகம். !

இளைப்பாறக் கிடைத்த
கிளைகளின் இலைகள்
உதிர்ந்துபோனால்

நிஜமான எதுவும்
அழிவதில்லை தோழி !
ஸ்நேகமும் அப்படித்தான். !

செவ்வாய், 28 ஜூலை, 2015

நட்பின் கவிதை.இரகசியம்

பாவம்
யாருக்கும் தெரியாதென்று
வானத்து நட்சத்திரங்கள்
கண்ணடித்துக் கொள்கின்றன.

>>>>>>>>>>>>> 

பரிமாற்றங்களுக்கு
அழைப்பு விடுத்ததால்
என் பாசக் கரங்கள்
நீண்டு போனது
உன்
இருப்பிடம் வரை. !

>>>>>>>>>>>>>>> 

நீள் வெளியும்
விரிநிலமும்
உரசிக் கொள்கிற
தொடுவானமாய்
நம்
கனவுகளும் வாழ்க்கையும்.

>>>>>>>>>>> 

முகத்துக்கு முன்னால்
முகமன்கள் பேசும்
முதுகுக்குப் பின்னால்
சதிகள் தீட்டும் தேசமிது.
Related Posts Plugin for WordPress, Blogger...