எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஏப்ரல், 2020

சுப்ரபாதம்

தாவரங்கள் சாமரம் வீச 
பறவைகளின் உலகம் 
புலர்ந்து கொண்டிருக்கிறது. 
மாற்றி மாற்றிக் கூவி 
சுப்ரபாதம் இசைக்கின்றன.
 

சனி, 25 ஏப்ரல், 2020

எப்பக்கம் ?

ராணிதான்
எப்பக்கமும் நகரலாம்.
எதிரில் நிற்கும் யாருமே
எதிரியல்ல எனும்போது
எங்கு நகர்வதெனத்தான் தெரியவில்லை
  

திங்கள், 20 ஏப்ரல், 2020

கடத்தல்.

இறக்கி வைக்கிறோமென நினைத்துக்
கடத்திக் கொண்டிருக்கிறார்கள் பயத்தை.
கை மாற்றிக் கொண்டிருக்கிறேன்
என் பங்குக்கு நானும்

புதன், 15 ஏப்ரல், 2020

நோய்க் கொக்கு

நுரையீரல் மீனுக்குத்
தூண்டிலிட்டுக் காத்திருக்கிறது
கொரோனா கொக்கு
  

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

இதே..

இதே மஞ்சள் பூத்தட்டு
இதே நீலத் தாழ்வாரம்
பூக்களை உதறி உருள்கிறது
இதே சாம்பல் பூமி
  

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

அப்பாலுக்கப்பால்

பசுஞ்சாறாய்க் கனிகிறது பூமி
பொன்னிற மதுவாய்க் கனிகிறது வானம்
இதற்கு அப்பாலுள்ளது எந்நிறமாயிருக்கும்..
  
Related Posts Plugin for WordPress, Blogger...