எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 13 ஏப்ரல், 2017

எதிர்வரும் ரயில்களும் ஸ்டேஷன்களும்.



நேரம் நகர மறுக்கிறது
நீ உப்பு மூட்டை
விளையாடிய முதுகில்
அதுவும் இப்போது
கண்ணே
எங்கே சென்றாய் ?
சமையற்காரியைக் கலக்கி
கிரைண்டரை நிறுத்தி
மிக்ஸியைத் தட்டிவிட்டு
குறுக்கே ஓடி
துணிகளைத் துழாவி
சோறு சிதறி
மழலை பேசி
யாரை மயக்கிக்
கொண்டிருக்கிறாய் நீ..
யாரிடம் அடம்பிடித்து
(கண்ணீர் இல்லாமல்)
அழுது கத்திக் கொண்டிருக்கிறாய் நீ.

இங்கோ அமைதியின் அலறல்.
தண்ணீர் வாளிகள்
வெய்யிலில் கருக்கலில்
வத்தல்கள் வாசலில்
பேனாக்களும் புத்தகங்களும்
அங்கங்கே.

எந்த ஸ்டேஷனில் இறங்கிய
பயணி நீ ?
வேறு ரயிலில் ஏறிக் கொண்டாயோ ?
நானோ எதிர்வரும்
ரயில்களையும் ஸ்டேஷன்களையும்
துழாவிக்கொண்டு உனக்காய் !

வேறிடம்.



கரப்பான்
கூடுகட்டிப்
போடும்
சிலந்தி
தன்னைப் பிடிக்கவே
வலை பின்னும்
கைகளுக்குள்ளும்
கால்களுக்குள்ளும்
பசையாய்
நிகழ்காலம்

வலை
தும்பட்டையாகும்

எங்கும் வெளிச்சம்
துரட்டிகள்
ஓரம் விலக்க
சிலந்தி பயணப்படும்
வேறிடத்தில் வலைபின்ன.

Related Posts Plugin for WordPress, Blogger...