tag:blogger.com,1999:blog-89470789043913014922024-03-14T08:31:18.855-07:00டைரிக் கிறுக்கல்கள்.குழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger1486125tag:blogger.com,1999:blog-8947078904391301492.post-8136009861599348672024-03-11T07:33:00.000-07:002024-03-11T07:33:25.151-07:00மலர்தல். சூரியன் மலர்ந்ததும்
தாமரையும் மலர்கிறது
இரட்டை இலையோடு.
Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8947078904391301492.post-75369015528753529162024-02-03T09:36:00.000-08:002024-02-03T09:36:26.689-08:00விரலில் நீந்தும் மீன்கள்மீன்களுக்கான பாடல்
தொடங்குகிறது தொலைக்காட்சியில்
சித்துக் குட்டியின் விரல்களில்
ஐந்து மீன்கள் நீந்தத் தொடங்குகின்றன
அவை ஒவ்வொன்றாகக் குறைந்து
ஒன்றாகின்றன.
மீண்டும் ஒன்றிலிருந்து ஐந்தாகி
நீந்தத் தொடங்குகின்றன.
பாடல் முடிகையில்
ஹாலே ஒரு மீன் தொட்டியாய் மாற
நீந்தத் தொடங்குகின்றோம் நாங்களும்.
Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8947078904391301492.post-17666394286387438102024-01-20T00:13:00.000-08:002024-01-20T00:13:29.390-08:00நிலாவின் ரேகைகள்சூரிய நெசவில்
வெளிச்சக் கோலங்கள்
பிரதிபலிக்கும் நீரில்
கண்ணாடிக் கோலங்கள்
மாலை நீல ஆகாயத்தில்
செம்மண் கரை கட்டல்
பால் ஒளிக் கோலமிடும்
நிலாவின் ரேகைகள்
பச்சையங்கள் முகத்திலோ
விடியலின் பனித்துளிக் கோலங்கள்
Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8947078904391301492.post-17883851998193729782023-12-02T05:41:00.000-08:002023-12-02T05:41:08.495-08:00ஆசுவாசம்.கற்களின் வெடிப்பிலிருந்து
பச்சை இரத்தநாளமாய்க்
கிளைத்தெழுகின்றன தாவரங்கள்.
கரியமிலம் உண்டு
பிராணவாயு விடுத்து
ஆசுவாசமாய் மூச்சு விடுகிறது பூமி.
Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8947078904391301492.post-66354163838761859212023-10-23T09:20:00.002-07:002023-10-23T09:20:14.180-07:00அம்மாவான அம்மு
பிரியா விடைகொடுத்து
வீடெங்கும் பொம்மைகளோடு
விளையாட விட்டுவிட்டு
வேலைக்குச் சென்றுவிடுகிறாள் அம்மா.
உணவூட்டித் தாலாட்டி
ஒவ்வொரு பொம்மையையும்
உச்சிமுகர்கிறாள்
அம்மாவான அம்மு.
Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8947078904391301492.post-15600680855264667912023-09-28T08:01:00.002-07:002023-10-03T07:05:36.047-07:00உச்சிக்கும் பூமிக்கும்..சூரியக் கனலிலிலிருந்து
பிரிந்து பறக்கின்றன
சாம்பல் மேகங்கள்.
பறவைகள் இங்குமங்குமாய்
விசிறிக் கொண்டிருக்கின்றன
வெளிறிய வானத்தை
மரக்கிளைகளை முட்டி
மறைந்துவிடுகிறது
ஆகாய விமானம்
கழுத்திலும் கண்ணோரத்திலும்
கோடிடும் முதுமைச் சாலையாய்ப்
பாதைகளும் பயணங்களும் நீள்கின்றன.
பருவத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும்
காகபுஜண்டராய்க் கண்காணித்து அலுக்கிறது
உச்சிக்கும் பூமிக்குமாய்ப் புதையும் மனது.
Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8947078904391301492.post-35605946494585132132023-06-13T02:27:00.003-07:002023-06-13T02:27:31.134-07:00கடின நெடி
ஒரு உன்மத்தம்தான் உன்னைச் செலுத்துகிறது
ஒன்றை உன் உரிமையானதாய்க் காட்ட.
விழுதைப் போலப் பற்றி இருக்கிறாய்
விழுந்துவிடலாம் என்றாலும்.
நீ பூசிக்கொள்ளும் ஒவ்வொரு சிரிப்பிலும்
வாழ்ந்த கணங்களின் கடின நெடி.
கடக்கின்றவர்க்குப் பழைய கள் என்றாலும்
உன் கரங்களில் எப்போதும் புதிய மொந்தை
மனச்சுரப்பில் நீயாய்ச் சுரந்து நீயாய்ச் சேமித்து
நீயே மாந்தி நீயே மயங்கி
காலங்கள் கடக்கட்டும் உன் சிந்தை மயக்கத்தில்
தெளியலாம் என்றேனும் அன்று
உன் முன் பாளைகள் வெடித்திருக்கும்.
Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8947078904391301492.post-67952397816920448252023-04-10T08:11:00.005-07:002023-04-10T08:11:43.305-07:00பெருக்கம்மஞ்சளும் சந்தனமும்
கொட்டிக்கிடக்கிறது
சொல்கேட்ட கல்யாண விநாயகர் சந்நிதியில்.
பரிட்சை வேண்டுதல்களை ஏற்று
வேல்கொண்டு வினைதீர்க்கக் காத்திருக்கிறார்
நெல்லி மரத்து விநாயகர்
திருமண பந்தத்தில் தானும் மாட்டாமல்
மாட்ட விரும்பாதவரையும் ரட்சித்து
ராம ராம என்கிறார் ஆஞ்சநேயர்
எல்லாரும் எம்மக்கள்தான்
என்கிறாள் சூலத்தோடு அமர்ந்திருக்கும்
காளியம்மா.
சுற்றி வருகையில் நூறாண்டுகளாய்க்
கொட்டிக்கிடந்த நெல்லி இலைகளும்
சிறுமுட்களும் நெருடுகின்றன பாதத்தை.
கோவில்களுக்குப் பின்
தகரப் பாதுகாப்பில் மறைந்திருக்கிறது
தாமரைக் குளம்
சுற்றிலும் பனையடிக் கருப்பர்,
பதினெட்டாம்படிக் கருப்பர், 108 பிள்ளையாருடன்
புதிதாய் எழுந்தருளி இருக்கிறார் யோக சனீஸ்வரர்.
எங்கள் ஐயாவின் காலத்திலிருந்து
நாங்கள் பல்கிப்பெருகியதைப் போல்
நெல்லி மரத்தாரும் தன் படை பட்டாளத்தைப் பெருக்கியிருக்கிறார்.
ஐயா உம் அணிவகுப்பு அருமைதான், பெருமைதானெனத்
தினம் வரும் சூரியனோடு சிலாகித்துச்
சுற்றி வந்து மகிழ்ந்து நிறைகிறோம் நாமும்.
Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8947078904391301492.post-19582782325238959592023-04-02T01:12:00.000-07:002023-04-02T01:12:09.531-07:00கண்ணேறுமஞ்சள் துகில் சரிகிறது
குட்டிச் சூரியன் எட்டிப்பார்க்க
துருவன் திருஷ்டிப் பொட்டிடுகிறான்.
மரங்கள் சாமரம் வீச
பறவைகள் கானம் இசைக்கின்றன
தவழும் சூரியன் ஏந்தி உருள்கிறது பூமி
மேகம்,மலை, மழையில் எல்லாம் சவாரி
வானவில்லிலும் கூட வழுக்கி இறங்குகிறான் சூரியன்
நீர்ச் சாரல்களை வழித்து முகம் துடைக்கிறது காற்று.
செம்மாந்து நிற்கிறது வானம்
செங்காந்தள் விரல்களால் சூரியனை ஏந்தி
ஆரத்திசுற்றிக் கண்ணேறு கழிக்கிறது இரவு.
Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8947078904391301492.post-77243418371398709662023-03-09T09:17:00.004-08:002023-10-03T07:32:07.040-07:00துண்டாடுதல்
தார் ரோட்டில்
குதித்தோடும் வெய்யிலுக்குக்
கவரி வீசிக்கொண்டிருக்கிறது
சாலையோர மரம்
வெக்கையோடு வீசும் காற்றை
விளாரிக்கொண்டிருக்கிறது
கருவேலம்
முள்ளாய் வெடித்த கம்மாயில்
சூம்பிக்கிடக்கின்றன
வெள்ளரிகள்
பறக்கவோ நிற்கவோ நடக்கவோ
என்ன செய்வதெனத் திகைத்துக்
காலூன்றத் தவித்துக் கொண்டிருக்கின்றன
பறவைகள்.
வெப்பத்தைக் கக்கி
நீரை உறிஞ்சிக் கருவேலத்தோடு
போட்டி போட்ட சூரியன்
துண்டாய்ப் பிரிந்தோடுகிறது தொலைக்காட்சியில்
Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8947078904391301492.post-57675640989573909702023-02-12T08:55:00.002-08:002023-02-12T08:57:12.159-08:00மனுசங்கதானா
கால் உந்தி ஓட்டும் மிதிவண்டியைப்
பக்கத்துப் பூங்காவில்
தொலைத்து விட்டு வந்து
நின்றான் மூத்தவன்.
கிரிக்கெட் விளையாடும்
பிளாஸ்டிக் மட்டையால்
இனி போவியா,
போட்டுட்டு வருவியா எனக் காலில்
இரண்டு சாத்து சாத்த
அதன் டொம் டொம் என்ற
சத்தம் கேட்டு அதிர்ந்த சின்னவன்
நீங்கள்ளாம் மனுசங்கதானா
என்று கதறினான்.
பெரியவன் உறைந்து நிற்க
நாங்கள்ளாம் மனிதர்கள்தானா
என்ற கேள்வியில்
உடம்பு விதிர்விதிர்க்கிறது.
Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8947078904391301492.post-79546368177557976672023-02-08T03:22:00.000-08:002023-02-08T03:22:17.955-08:00புருஷாயணம்
இத்தோடு எல்லாம் முடிந்தது
என்று நினைக்கும்போது
புதிய கவிதைகள்
பிறக்கத் தொடங்கி விடுகின்றன
புதிய வருடங்கள் போல,
ஒன்றுமே நடக்காததுபோல்
என்மேல் நீ பொழியும் காதலைப் போல,
விட்ட இடத்திலிருந்தே தொடங்கும்
நம் வாக்குவாதங்களைப் போல
-- புருஷாயணம்
Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8947078904391301492.post-73897486674367548082022-11-29T11:30:00.009-08:002022-11-29T11:30:00.212-08:00உச்சம்
அவளைப் பார்க்கும்போதெல்லாம் தோன்றுகிறது..
என் இயலாமையின் உச்சமாக
என் கழிவிரக்கத்தின் உச்சமாக
என் கனவுகளின் உச்சமாக..
சிலசமயம் என் வாழ்நாள் வெற்றியின் உச்சமாகவும் கூட.. !
Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8947078904391301492.post-3708888209557542982022-10-31T04:55:00.004-07:002022-10-31T04:55:37.078-07:00பணமும் மனமும்..
பணம் பேசும் உலகில்
மனம் பேசுவதில்லை
மனம் பேசுவது
பணத்தின் காதுகளில் விழுவதில்லை
இரண்டிற்கும் உறவில்லையெனத்
தெரிந்தும் ஏங்குவது அறியாமை.
Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8947078904391301492.post-13458629941984637352022-09-29T23:13:00.003-07:002022-09-29T23:13:24.489-07:00சுத்தம்
தட்டவரும் கழி தாண்டி
உயிரைக் கையில் பிடித்து
எட்டுக் கால் பாய்ச்சலாய்த்
தப்பி ஓடிக் கொண்டிருக்கிறேன்.
திரும்பிப் பார்த்தால்
ஒட்டுமொத்தமாய் என் வீட்டை
ஒழித்தழித்துவிட்டு
ஒட்டடை அடித்தேன்
சுத்தமாகிவிட்டது வீடு எனப்
பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்
பிறர் வாழப் பொறுக்காதவர்கள்.
Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8947078904391301492.post-3261905096314739242022-08-04T09:33:00.008-07:002022-08-04T09:33:57.010-07:00கண்ணபிரான்
நித்ய வழிபாடுகளுக்குள்
சிக்கித் தவிக்கிறது என் ஆன்மீகம்
எங்கெங்கும் நிறைந்து
என் இசை போல் வழிந்து
நிரம்பியும் கரைந்தும் செல்கிறான் ஈசன்
கட்டிவைக்கும் வித்தை தெரிந்தும்
கடமைகளின் பேரால்
கட்டவிழ்த்து விடுகிறேன்.
கன்னத்தில் கை பதித்துக்
கண்ணுக்குள் கண் கோர்க்கக்
காத்திருக்கிறான் என் கண்ணபிரான்
Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8947078904391301492.post-72049149223692424442022-07-29T22:07:00.001-07:002022-07-29T22:07:12.327-07:00நடனம்.
அடவு பிடித்து
இறங்கிச் செல்கிறது சூரியன்
நாட்டியத்தைத் தொடர
வெண்முத்திரையோடு
மேலேறுகிறது நிலவு.
Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8947078904391301492.post-13489693575144692672022-07-25T17:35:00.002-07:002022-07-25T17:35:24.206-07:00கல் பயணம்.
ஒரு கூழாங்கல்லாய்க்
கிடக்க விரும்புகிறேன்.
நீ உருட்டும் திசையெல்லாம்
உன் கூடவே பயணிக்க.
எங்கோ என்னைக் கொண்டு
சேர்த்துவிட்டு
நீ மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறாய்
வெய்யிலில் கண்மினுங்க
உன் வெம்மைத் தழுவலில்
மதிமயங்கிக் கிடக்கின்றேன்.
Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8947078904391301492.post-43488791006832350122022-05-17T18:52:00.002-07:002022-05-17T18:52:42.795-07:00வெட்கக் குறிப்புகள்
வருடத்தில் சிலமுறைதான்
எதிர்ப்படுகிறாய்.
வருடம் முழுமைக்கும்
பொங்கி வழிகிறது வெட்கம்.
எதிர்கொள்ள இயலாமல்
தலைகுனிந்து கடக்கிறேன்.
என் ஓரவிழிப் பார்வையை
எப்படியோ கவ்வி விடுகிறது
உன் கருடப் பார்வை.
நெளியும் மீனாய்
ஓடும் என் பின்
பரவிக் கிடக்கிறது
உன் பார்வை அணைப்பு.
உணர்வுகள் கிளர்ந்தெழ
பக்கம் இல்லாத உன் தோள்சாய்ந்து
இம்முறையும் கடக்கிறேன்
ஒரு சந்திப்புக்கும்
மறு சந்திப்புக்கும் இடையில்
யார் யாரோ பகிர்ந்த புகைப்படங்களில்
சிங்கம் போல் சிலிர்த்து நிற்கும்
உனைப்பார்த்து மௌனமாய் ரசித்து
பெருமிதப்பட்டுக் கொள்கிறது மனம்.
உனக்குத் தெரியாமல்
உன்னைக் காதலிப்பதென்பது பெரும் சுகம்.
Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8947078904391301492.post-78577907658149095852022-05-11T10:58:00.000-07:002022-05-11T10:58:42.195-07:00நெகிழும் மணல்
சிதறும் அலைகளுக்குள்
கைபிடித்துச் செல்ல உன்னால் முடியும்
நனையும் அச்சமின்றிக்
காற்றைப் போல் வருகிறேன்
வெள்ளித் துகள்களாய் நம்மை
வரைந்து கொண்டிருக்கிறது சூரியன்
கால தேச வர்த்தமானம் இன்றிக்
கரைந்து ஓடுகிறோம் கரைகள் எங்கும்
பாதங்களின் கீழ் நெகிழ்ந்து நெகிழ்ந்து
கடலுள் தன்னை மறைத்துக் கொள்கிறது மணல்.
Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8947078904391301492.post-46038551889937258782022-05-05T12:30:00.001-07:002022-05-05T12:30:00.205-07:00பறத்தல்
ஆகப்பெரிய உயரத்தில்
ஒரு பறவை பறந்து போனது
மேகங்கள் அதன் கீழ்
மெத்தைகளாய்ப் புரண்டன
ஓய்வெடுக்கத்தான் அனுமதிக்கவில்லை
அப்பறவையின் இறக்கைகள்.
எதை நோக்கிப் போகிறோம்
எதற்காகப் போகிறோம்
காற்றின் கோதுதலிலும்
கனக்கத் தொடங்கின சிறகுகள்.
Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8947078904391301492.post-63569708754349103172022-04-28T12:30:00.001-07:002022-04-28T12:30:00.185-07:00தனித்துத் தொலைதல்
என்னிடமிருந்து அவள்
என்னைத் திருடிக் கொண்டிருக்கிறாள்.
இருந்தும் அனுமதித்திருக்கிறேன்.
தனித்திருப்பது சுமையாய் இருக்கிறது.
தொலைந்துதான் போவோமே.
Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8947078904391301492.post-67974164790349322682022-04-13T07:39:00.000-07:002022-04-13T07:39:48.944-07:00பாவனைப் பூனை
கால்மேல் கால் போட்டு
அமர்ந்திருந்தான் ஒருவன்
அவனுடைய பாவனைகளைக்
கவனிக்க தொடங்கினேன்.
கண்ணாடிப் பார்வைக்குள்
காகிதத்தை மேய்ந்து கொண்டிருந்தான்.
மோவாயில் கை வைத்திருந்தான்
இன்னொருவன்.
செல்போனைத் தேய்த்துக் கொண்டிருந்தாள்
ஒருத்தி.
கூரிய பார்வையில்
கூட்டத்தினரைப் பார்த்துக் கொண்டிருந்தான்
மற்றொருவன்.
மா மரத்தின் பக்கத்தில் உள்ள
மதிலில் அமர்ந்து
எங்கள் அனைவரின் பாவனைகளையும்
பார்த்துக் கொண்டிருந்தது
ஒரு பூனை.
Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com1