எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 ஜூலை, 2022

நடனம்.

அடவு பிடித்து
இறங்கிச் செல்கிறது சூரியன்
நாட்டியத்தைத் தொடர
வெண்முத்திரையோடு 
மேலேறுகிறது நிலவு. 

 

திங்கள், 25 ஜூலை, 2022

கல் பயணம்.

ஒரு கூழாங்கல்லாய்க்
கிடக்க விரும்புகிறேன்.
நீ உருட்டும் திசையெல்லாம்
உன் கூடவே பயணிக்க.
எங்கோ என்னைக் கொண்டு 
சேர்த்துவிட்டு
நீ மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறாய்
வெய்யிலில் கண்மினுங்க
உன் வெம்மைத் தழுவலில்
மதிமயங்கிக் கிடக்கின்றேன். 
 
Related Posts Plugin for WordPress, Blogger...