எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 5 டிசம்பர், 2017

உதயம்

சித்திரை
அது உன் முகத்திரை

வைகாசி
எப்போதும் வேண்டும் உன் ஆசி

ஆனி
நானா உன் ராணி ?

ஆடி
உள்ளுக்குள் உனைத் தேடி.

ஆவணி
( மனசை) மறைக்கத்தான் வேண்டும் இனி.

புரட்டாசி
நானோ உனது பாதத்தூசி.

ஐப்பசி
எனக்கு மனம் முழுக்க இலக்கியப் பசி.

கார்த்திகை.
யாராலும் முடியாதது உன்னுடைய ஈகை

மார்கழி
உன் யோசனைகளில் என்னைக் கழி

தை
உனக்கு உறைக்குமா உண்மை.

மாசி
நீ காலம் கழி என்னை ஏசி

பங்குனி.
நல்ல உதயம் பிறக்கவேண்டும் இனி.


-- 88 ஆம் வருட டைரி. :)

திங்கள், 4 டிசம்பர், 2017

காய்ப்பு.

கிடக்கட்டும்
அந்த வயல்கள்.
எப்போதும் சாகுபடி செய்து
என்ன பெற்றோம் ?

ஏ! சின்னச் செடியே
இந்தச்
சித்திரைக்கா
சுருள்வது?
சோம்பாதே.
சிரித்து நில்.
சுபிட்சம் வரும்.

நீ
சீகைக்காய்களாய்க்
காய்த்துப் போ.
நீ
காய்த்துப் போனால்
பலன் உண்டு என்றால்
காய்வதற்கு ஏன் வருத்தம் ?

உன்
மனத்தைக்
காய்க்கச் செய்து
தூகைகளையும் நேசி.
தூகைகளும் தழையலாம்.


-- 14 . 3. 88.

வெள்ளி, 1 டிசம்பர், 2017

சீய்த்தல்.

இரையில்லாத மண்ணைக்
கொத்தும் கோழியாய்
தனிமை என்னைச்
சீய்த்துப் போடும்.

அவ்வப்போது
தன் அலகால்
ஆழம் பார்க்கும்.
ஞாபகப் பிரதேசத்தின்
ஏதோ ஒரு புழுவை
அரைகுறையாய்ப் பிடுங்கி
ஆராய்ந்து மெல்ல உண்ணும்.

நினைவுகளோ
மண்புழுக்களாய்
நெளிந்து நீளும்,
ஞாபக மண்ணில்,

கோழி
பாலைவனத்தையும்
சோலை வனத்தையும்
கிளறி உண்டு ஓயும்..

மனசுள்ளும்
வெளியேயும் எப்போதும்
இரண்டு கோழிகள் எனக்காய்..
என்னைக் கூறு போட்டுக் கொண்டு..


-- 82 ஆம் வருட டைரி. :)

வியாழன், 30 நவம்பர், 2017

நானுமோர் துறவி.

நானொரு துறவி
பூர்வாசிரமத்தை
விட்டு வந்த துறவி.

தவம் என்னும்
கடமைக்காக
மலையேறிக்
கஷாயம் உடுத்தி
முடிவளர்த்துக் குவித்து
ஜபமாலை உருட்டி
நீரர்ப்பணம் செய்து
ஜபமாலை உருட்டி
நீரர்ப்பணம் செய்து
நானுமோர் துறவி.

கனிகாயால் கிளைத்தெழுந்து
கோபமழிந்து
சாந்தம் புகுந்து
இறைமையை அர்ச்சித்து,
தூரதர்சித்து,
நானுமோர் துறவி.

கொட்டையணியாமல்
கட்டை மாட்டாமல்
ஓடு ஏந்தாமல்
நீறு தீட்டாமல்
நானுமோர் துறவி.


-- 82 ஆம் வருட டைரி. :)

புதன், 29 நவம்பர், 2017

நினைவுப் பை.

மடங்கிக் கிடக்கிறது
ஞாபகம்,
உன் மனசாய்
எனக்குள்.

க்ளிப்பின்
கரங்களுக்குள்
துணிகளாய்
நினைவுப் பையும்
காற்றாடும்.

படுக்கை விரிப்புகள்
நுனி மடங்காமல்,
வெறுக்கத்தக்க
அழகுடன்.

விட்டத்துப் போர்வைகள்
விட்டிலாய்
என்மேல் சரிய
விளக்காய் நான்.

அனைவரின்
பேச்சுக்களும்
தென்னை மட்டைச்
சரசரப்பாய்
ஒன்றும் செய்யாது
போகும்..,
என்னை.


-- 82 ஆம் வருட டைரி. :)

வியாழன், 23 நவம்பர், 2017

கூடுகள்.

எங்கேயோ
சில நாற்றங்கால்கள்
தலை சிலுப்ப
எனக்குள்ளா ?
எனக்குள்ளா ?
இல்லை இல்லை
இவை மக்கிச் சரியும்
வைக்கோல்கள்.

நுழைவுத் தோரணங்களாய்
சிலந்திக் கூடுகள்.

மனிதர்களாய்
இரைகுதறும் சிலந்தி

மனிதத்தாலே
உண்ணப்படும்
மனிதம்

நகமும் அழுக்குமாய்
மனிதனும் மனசும்.

-- 83 aam varuda diary.

செவ்வாய், 21 நவம்பர், 2017

கள்ளியாய்.

நிலவைப் போலவே
தேய்ந்தும்
வளர்ந்தும்
உன்னுள் எண்ணங்கள்.

நீ
அந்த நிலைத்த சூரியனைப்
போல் இரேன்.

இடித்தவுடன்
நொறுங்கும் கண்ணாடியாய் இல்லாமல்
தேயத் தேயத்
தகதகக்கும் தங்கமாய் இரேன்.

தொட்டவுடன்
சுருங்கும் பூவாய் இல்லாமல்
தண்ணியில்லாக்  காட்டின்
கள்ளியாய்க் களைக்காமலிரேன்.


-- 82 ஆம் வருட டைரி. :)

முச்சந்தி.

ஏன் நிகழ்கிறது
இந்த விசித்திரம்
ஏனெனில் நீ ஒரு தரித்திரம்

வருடந்தோறும்
மலருக்கெல்லாம் வசந்தம்
உனக்கு மட்டும் கசந்தும்.

ஒவ்வொருவருக்கும்
அவரவர் பாதை
நீ ஒரு முட்டாள் முச்சந்தி

இயற்கைக்குக் கூட
உன்னைக் கண்டு இளப்பம்.
உனக்கென்றால்
பருவகாலங்களும் புத்தி பேதலிக்கிறது.

சூழ்நிலைச் சங்குகள்
உன்னைக் கண்டு கத்தும்.
நீ
சும்மா கிடந்த  ஆண்டிபோல்
(உறவுச் ) சுமை தூக்கி அலைவாய்.

உனக்கேன் விரக்தியும் வெறுப்பும் ?
அடித் தேனு !

சந்தோஷமாய் இரேண்டி சனியனே !

-- 82 ஆம் வருட டைரி. :)

திங்கள், 20 நவம்பர், 2017

அருகு.

நீ என்னருகில்
இருக்கும்போது
எந்தக் காயங்களும்
என்னைச்
சேதப்படுத்துவதில்லை.

நீ என்னருகில்
இல்லாதபோதோ
கொடிக்கம்பி நிழல்களெல்லாம்
விசுவரூபம் எடுத்து
எனை விழுங்கக் காத்திருப்பதாய்.

-- 86 aam varuda diary

வெள்ளி, 17 நவம்பர், 2017

கூட்டுப் புழு.

உனக்கேன்
இந்த
வண்ணத்துப் பூச்சிக் கனவுகள்.

நீ
ஆணாகவோ பெண்ணாகவோ
ஆசைப்படலாமா ?
ஏன் பிறந்தாய் ?
அவதிப்படு.

உனக்குள்ளே
கூடு கட்டு இன்பமாய்.
கூட்டுப் புழுவிலே
கொல்லப்படுவாய் எனத் தெரிந்தும்
கூடு கட்டு
உருப்படாமல் போ

மனசைக் கழட்டி
விட்டெறிந்து விட்டுச்
சும்மா கிட.

உனக்கேன் மனசும்
கனவும் இன்னொண்ணும்.

அரைக்குக் கோவணமில்லை
போர்வைக்குப் பேராசையா ?

-- 82 aam varuda diary

உம் பணம் பணம் எம் பணம்.

எல்லாரும்
சந்நியாசியாகுங்கள்.
இல்லாவிடில்
சந்யாசிகளாக்கப்படுவீர்கள்.

மணமானவர்கள்
மகான்களாக இருங்கள்
இல்லாவிடில்
மகான்களாக்கப்படுவீர்கள்.

முப்பணம் பற்றி
ஞானியாயிருங்கள்.
செலவழித்த பணம்
செலவழிக்கும் பணம்
செலவாகப் போகும் பணம்

பணம் உங்கள் அகராதியில்
பணம் ( வரும் அல்ல ) போகும் போகும்
எல்லாருக்கும் ஈந்து
ஈரத்துணியைக்
கட்டிக்கொண்டு படுங்கள்.

சாதுக்களாயிருங்கள்
சீறினீர்களோ
உங்கள் ஈகோ கொல்லப்பட்டு
சாதாக்களாக்கப்படுவீர்கள்.

-- 86 ஆம் வருட டைரி

புதன், 15 நவம்பர், 2017

விநாயகர் துதி.

விநாயகன் பேர் கொண்டு வினைகள் பல தீர்த்திடுவான்
விண்ணிற்கும் மண்ணிற்கும் முதலான பெருமானே !
ஆனை முகத்தானே ! யார்க்கும் நலம் புரிந்திடுவான் !
அன்னை பார்வதிபோல் அழகுப்பெண் தேடுகிறான். !

உன்னையே கதி என்று உய்யுமுன் அடியார்க்கு
உதவினேன் எனக்கூறி ஐந்துகரம் நீட்டிடுவான்.
பெருமை பல கொண்டிருந்தும் பொறுமையினால் அமைதிகொண்டு
சிறுமை பல புரிவோர்க்கும் சிறப்புவரம் தந்திடுவான்.

உன்னையே கதியென்று உய்யும் முன்  ( உய்யும் உன் ) அடியார்க்கு
‘தந்தேன் அபயம்’ என ஐந்து கரம் நீட்டிடுவான்.

பெருமை பல கொண்டிருந்தும் சிறுமை பல புரிவோர்க்கு
பொறுமையினால் அமைதி கொண்டு பெரும் நலனே நல்கிடுவான்.

-- 8 . 4. 1981.

செவ்வாய், 14 நவம்பர், 2017

வள்ளியப்பன் நாமத்தான் எந்தன் தம்பி.


வள்ளியப்பன் நாமத்தான் எந்தன் தம்பி!
அள்ளி அள்ளிக் கொடுப்பான் எந்தன் தம்பி !
பள்ளி கொண்டி ருப்பான் எப்போதுமே
வள்ளி யைத்தான் மணப்பான் எந்தன் தம்பி !

ஓயாமல் சண்டை போடும் அன்புத்தம்பி!
ஆயாவீட்டு ஐயா பேருனக்கு அருமைத்தம்பி!
ஐயா போல் இருந்திடுவாய் அன்புத்தம்பி !
பொய்யே நானும் சொல்லமாட்டேன் ஆசைத்தம்பி !

பட்டப்படிப்பு படிப்பாயா எந்தன் தம்பி!
சட்டப்படிப்புப் படிப்பாயா எந்தன் தம்பி !
குடத்திலிட்ட விளக்குப் போல இருந்திடாமல் நீயும்
மடைதிறந்த வெள்ளம் போல துடிப்புக் கொள்வாயே!

டிஸ்கி :- இது என் சகோதரன் பாபு என்ற வள்ளியப்பன் என்ற சேவுகன் செட்டிக்காக அவன் பிறந்தநாளில் எழுதியது. . வருடம் நினைவில் இல்லை. 80, 81  இருக்கலாம். அவன் இப்போது இல்லை. 44 வருடங்கள் வாழ்ந்த அவன்  2013  ஏப்ரல் ஆறாம்தேதி இயற்கை எய்திவிட்டான்.

ஞாயிறு, 12 நவம்பர், 2017

சௌந்துவுக்காக..

நேரம் நகர மறுக்கிறது
நீ உப்புமூட்டை
விளையாடிய முதுகில்
அதுவும் இப்போது
கண்ணே
எங்கே சென்றாய் ?
கொல்லத்தின் சமையற்காரியக் கலக்கி
கிரைண்டரை நிறுத்தி
மிக்ஸியைத் தட்டிவிட்டு
குறுக்கே ஓடி
துணிகளைத் துழாவி
சோறு சிதறி
மழலை பேசி
யாரை மயக்கிக்
கொண்டிருக்கிறாய் நீ. ..

யாரிடம் அடம்பிடித்து
(கண்ணீர் இல்லாமல் )
அழுது கத்திக் கொண்டிருக்கிறாய் நீ

இங்கோ அமைதியின் அலறல்.
தண்ணீர்வாளிகள்
வெய்யிலின் கருக்கலில்,
வத்தல்கள் வசலில்,
பேனாக்களும் புத்தகங்களும்
அங்கங்கே..

எந்த ஸ்டேஷனில் இறங்கிய
பயணி நீ ?
வேறு ரயிலில்  ஏறிக்கொண்டாயோ ?
நானோ எதிர்வரும்
ரயில்களையும் ஸ்டேஷன்களையும்
துழாவிக்கொண்டு உனக்காய் !

வலை.

கரப்பான்
கூடு கட்டிப்
போடும்.
சிலந்தி
தன்னைப் பிடிக்கவே
வலை பின்னும்.
கைகளுக்குள்ளும்
பசையாய்
நிகழ்காலம்
வலை
தும்பட்டையாகும்
எங்கும் வெளிச்சம்
துரட்டிகள்
ஓரம் விலக்க
சிலந்தி பயணப்படும்
வேறிடத்தில் வலைபின்ன.

ஞாயிறு, 7 மே, 2017

சக்கைகளாய்..

சனம்
சுடும்
குளிர்பொழுதுகள்
இனமற்று வளையும்
இமைக்குள் கலையும்.

பாறைகள்
செருப்புப் பாதங்களால்
சில்லுகளாகும்.
திறந்திருக்கும்
கதவுகள்
எதிர்பாராமல்
மூடப்படும்.

பகல் ரொட்டிக்குள்
நட்சத்திரச் சீனிகள்
புதைந்து போகும்.

இரவுகளில்
நட்சத்திரக் கொலுசுகளின்
சிணுங்கல்கள்
லயமற்று லயமற்று..

மரங்கள்
பூதமாய் சுயம் விரிக்க
சுயம் விரிக்க..

பூமியின் ஆகாரப் பகுதிகள்
ஆதாயப் பகுதிகள்
ஆதாரப் பகுதிகள்
சிலசமயம் பிசிறடிக்கும்

கடலைத் தோலிகளாய்
மனிதம் எறியப்படும்
மனிதாபிமானம் உடைபட்டுச்
சக்கையாய்
சக்கைகளாய்..

வியாழன், 13 ஏப்ரல், 2017

எதிர்வரும் ரயில்களும் ஸ்டேஷன்களும்.நேரம் நகர மறுக்கிறது
நீ உப்பு மூட்டை
விளையாடிய முதுகில்
அதுவும் இப்போது
கண்ணே
எங்கே சென்றாய் ?
சமையற்காரியைக் கலக்கி
கிரைண்டரை நிறுத்தி
மிக்ஸியைத் தட்டிவிட்டு
குறுக்கே ஓடி
துணிகளைத் துழாவி
சோறு சிதறி
மழலை பேசி
யாரை மயக்கிக்
கொண்டிருக்கிறாய் நீ..
யாரிடம் அடம்பிடித்து
(கண்ணீர் இல்லாமல்)
அழுது கத்திக் கொண்டிருக்கிறாய் நீ.

இங்கோ அமைதியின் அலறல்.
தண்ணீர் வாளிகள்
வெய்யிலில் கருக்கலில்
வத்தல்கள் வாசலில்
பேனாக்களும் புத்தகங்களும்
அங்கங்கே.

எந்த ஸ்டேஷனில் இறங்கிய
பயணி நீ ?
வேறு ரயிலில் ஏறிக் கொண்டாயோ ?
நானோ எதிர்வரும்
ரயில்களையும் ஸ்டேஷன்களையும்
துழாவிக்கொண்டு உனக்காய் !

வேறிடம்.கரப்பான்
கூடுகட்டிப்
போடும்
சிலந்தி
தன்னைப் பிடிக்கவே
வலை பின்னும்
கைகளுக்குள்ளும்
கால்களுக்குள்ளும்
பசையாய்
நிகழ்காலம்

வலை
தும்பட்டையாகும்

எங்கும் வெளிச்சம்
துரட்டிகள்
ஓரம் விலக்க
சிலந்தி பயணப்படும்
வேறிடத்தில் வலைபின்ன.

வியாழன், 5 ஜனவரி, 2017

படித்த புத்தகங்கள்.1.புதுமைப்பித்தன் - சிறுகதைத் தொகுப்பு
2. லா. ச. ரா.
3. சுந்தர காண்டம் – ஜெயகாந்தன்
4. அன்பே ஆரமுதே – தி. ஜா
5. மரப்பசு – தி. ஜா.
6. விமோசனம் – அசோகமித்திரன்
7. தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி
8. புளியமரம் – சுந்தர ராமசாமி
9. ஜே ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
10. சந்தனக் காடுகள் – வாஸந்தி
11. வீடு – இராஜம் கிருஷ்ணன்
12. மனிதர்கள் பாதிநேரம் தூங்குகிறார்கள் – வாஸந்தி
13. நளபாகம் – தி. ஜா.
14. காகிதச் சங்கிலி – சுஜாதா
15. சுருதி பேதங்கள். – வாஸந்தி
16. இடைவெளிகள் தொடர்கின்றன – வாஸந்தி.
17. இரவீந்திரன் கதைத் திரட்டு – தண்டலம் நா. குமாரஸ்வாமி
18. பாதையோரப் பூக்கள் – வாஸந்தி
19. அனுமானங்கள் நம்பிக்கைகள் – வாஸந்தி. 
20. நம்பமாட்டேளே – ஜெயகாந்தன்
21. கலைக்கமுடியாத ஒப்பனைகள் – வண்ணதாசன்
22. ஜீவனாம்சம் – சி. சு. செல்லப்பா.
23. சிறுகதைத் தொகுதி 1 – சி. சு. செல்லப்பா
24. சிறுகதைத் தொகுதி 2 – சி. சு. செல்லப்பா
25. கிழக்கு வெளுத்தது – வை. மு. கோதைநாயகி அம்மாள்
26. வானம்பாடிக்கு ஒரு விலங்கு – லெக்ஷ்மி
27. உறவுகள் தொடர்கதை – சுபாஷிணி
28. அகல்யா – பாலகுமாரன்
29. பனிவிழும் மலர்வனம் – பாலகுமாரன்
30. மெர்க்குரிப் பூக்கள் – பாலகுமார்ன
31. பச்சைவயல் மனது – பாலகுமாரன்
32. கல்யாண முருங்கை – பாலகுமாரன்
33. உயிர்த்தேன் – தி.ஜா.
34. அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் – ஜெயகாந்தன்
35. அர்த்தம் உள்ள இந்துமதம் மூன்று பாகங்கள் – கண்ணதாசன்
36. இளமைக் கனவுகள் – கோமகள்
37. பொன்னூஞ்சல் – பி வி ஆர்
38. பார்த்திபன் கனவு – கல்கி
39. சிறகுகள் முறியும் – அம்பை
40. கடைசிப்பக்கம் – கண்ணதாசன்
41. கமலம் – தி. ஜா. ( அவலும் உமியும் தோடு )
42. 6.9.61 – சுஜாதா ( ரோஜா, ஜோதி)
43. இல்லாத பிள்ளைக்குக் கல்யாணம் – எஸ். ரங்கநாயகி
44. வடிவங்கள் – சுஜாதா
45. யுகசந்தி – ஜெயகாந்தன்
46. குருபீடம் – ஜெயகாந்தன்
47. அணைக்க அணைக்க – புனிதன்
48. – இந்திரா பார்த்தசாரதி
49. பாரீசுக்குப் போ – ஜெயகாந்தன்
50. நிஜங்கள் – வாஸந்தி
51. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா
52. அந்தரத்தில் ஓர் ஊஞ்சல் – கோமகள்
53. நான் புத்தனில்லை – வாஸந்தி
54. கம்ப்யூட்டரின் கதை – சுஜாதா
55. உன்னைப் போல ஒருவன் – ஜெயகாந்தன்
56. ஒளிவதற்கு இடமில்லை – டி. துரைசாமி
57. அக்னி – இந்திரா பார்த்தசாரதி
58. யுகதர்மம் – இந்திரா பார்த்தசாரதி
59. திரிசங்கு சொர்க்கம் – சிவசங்கரி
60. உண்மைக்கதைகள் – சிவசங்கரி
61. சக்தி வைத்யம் – தி. ஜா. ( சிறுகதைத் தொகுப்பு)
62. பால்மரக் காட்டினிலே – அகிலன்
63. வானமா பூமியா – அகிலன்
64. கேட்கக் கூடாத காரணங்கள் – வாஸந்தி
65. அக்பர் சாஸ்த்ரி – தி. ஜா,
66. மலர்மஞ்சம் – தி. ஜா.
67. INWARD JOURNEY – DOULATBHAI DESAI
68. அம்மா வந்தாள் – தி. ஜா
69. இதுவரையில் நான் – வைரமுத்து
70. பாட்டியின் கனவுகள் – சிவராம காரந்த். ( முக்கஜ்ஜீய கனஸுகளு - தமிழில் DR. டி பி சித்தலிங்கையா)
71. மோகமுள் – தி. ஜா.
72. ஜெயந்தன் நாடகங்கள் – ஜெயந்தன்
73. நிலமெனும் நல்லாள் – இந்திரா பார்த்தசாரதி
74. மாயமான் வேட்டை – இந்திரா பார்த்தசாரதி
75. பாற்கடல் – லா ச ரா
76. உத்தராயணம் – லா ச ரா
77. கு ப ராஜகோபாலன்
78. ந. பிச்சமூர்த்தி.


கவிதைகள்
பசப்பல் – கே ராஜ கோபால்
அந்தி – துரை சீனிச்சாமி
சண்முக சுப்பையா கவிதைகள்
நீலபத்மனாபன் கவிதைகள்.

1. லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்.- கேபிள் சங்கர்.
2. டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும். - பரிசல்காரன்
3. A SLUM NO MORE ( இனி இது சேரி இல்லை) - எஸ் பைரவன், சாருகேசி.
4. ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க. - கோபிநாத்.
5. ரவி குல தி்லகன் .- கல்கி கி இராஜேந்திரன்.
6. திரைச்சீலை - ஓவியர் ஜீவா.
7. வீழ்தலின் நிழல் - ரிஷான் ஷெரிஃப் 
8. ருக்மணி அம்மாவின் புத்தகங்கள்  - ருக்மணி சேஷசாயி
9. ஆதலினால் காதல் செய்வோம்.- பொ. ம. ராசமணி
10. தலைப்பு இழந்தவை .-  ஈழவாணி ஜெயாதீபன் 
11. சாக்பீஸ் சாம்பலில் - நாணற்காடன்
12. நீங்கதான் சாவி. - சுரேகா    
13. ஆத்மலயம் - கங்கைமகன்
14. கார்ட்டூன் பொம்மைக்குக் குரல் கொடுப்பவள் - நேசமித்ரன்
15. முகில் பூக்கள் - பி. கு. சரவணன்
16. ஞாபகம் வருதே - கிரிஜா ராகவன்
17. என்னைச் சுற்றிப் பெண்கள் - கிரிஜா ராகவன்
18. முணுமுணுப்பு - கயிலை மு. வேடியப்பனின் 
19. நிறைய அமுதம் ஒரு துளி விஷம். -  வைரஸ் 
20. உலோகம் - ஜெயமோகன்
21. என் கைரேகை படிந்த கல் - யாழி கிரிதரன்
22. பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி
23. கறுப்பு வெள்ளை - மார்ட்டின் லூதர் கிங் - பாலு சத்யா
24. தேவந்தி - சுசீலாம்மா
25. குற்றமும் தண்டனையும் - சுசீலாம்மா
26. அசடன் - சுசீலாம்மா
27. அதீதத்தின் ருசி -  மனுஷ்ய புத்திரன்
28. இதற்கு முன்பும் இதற்குப் பின்பும் - மனுஷ்ய புத்திரன்
29. நாடகம் நிகழ்வு அழகியல் - வெளிரங்கராஜன்
30. நினைவில் நிற்கும் நேர்காணல்கள் - அண்ணா கண்ணன்
31. சிறகை விரிப்போம் - தென்கச்சி கோ. சுவாமிநாதன்
32. மகாபலிபுரம் உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி - ஸ்ரீனிவாஸ், ஜே. பிரபாகர்
33. மந்திரப் பூனை - வைக்கம் முகம்மது பஷீர்
34. பூவரசி
35. இரவில் நான் உன் குதிரை - மகாலிங்கம்
36. முனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள் ஒரு பார்வை.
37. மெல்லினம்
38. மெய்ப்பொருள், கனவு, குலவை, அகநாழிகை ,கணையாழி, துளிர், வணிகக் கதிர்
39. சிங்கப்பூரில் தமிழ் தமிழர் - சௌந்தர நாயகி வைரவன்
40. மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் - பத்மஜா நாராயணன்.
41. தானாய் நிரம்பும் கிணற்றடி - ஐயப்ப மாதவன்
42. நீ நதி போல ஓடிக்கொண்டிரு - பாரதி பாஸ்கர்
43. நெருஞ்சி - காலகாலன்
44. மனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர். தமிழில் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன்
45. வனக்கோயில் - தமிழில் இராஜேஸ்வரி கோதண்டம்
46. பெய்த நூல் - மணிவண்ணன்
47. மதில்கள் - வைக்கம் முகம்மது பஷீர்
48. ஒரு குட்டித் தீவின் வரைபடம் - தோப்பில் முகம்மது மீரான்
49. அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.?. - பெ. கருணாகரன்
50. பணம் செய்ய விரும்பு - நாகப்பன் - புகழேந்தி
51. சுஜாதா நினைவுப் புனைவு 2009 - தொகுப்பு சந்திரன்
52. . இதழில் எழுதிய கவிதைகள்  - சங்கவி ( அணிந்துரை - தேனம்மைலெக்ஷ்மணன் )
53. கருவேல நிழல் - பா. ராஜாராம்
54. ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை - பொன். வாசுதேவன்.
55. அடை மழை - ராமலெக்ஷ்மி 
56. சிறகு விரிந்தது - சாந்தி மாரியப்பன்
57. வெய்யில் புராணம் - உமா மோகன்
58. தெரிவை - பத்மஜா நாராயணன்
59. குறுக்கு மறுக்கு - சிவகுமார் அசோகன்
60 சுனை நீர் - ராகவன் சாம்யேல்
61. மொட்டு விரியும் சத்தம் - பி; லங்கேஷ் ( கன்னடம் ) தமிழில் கா. நல்லதம்பி.
62. எல்லாருக்கும் பிடித்த எம்ஜியார் - பா. கணேஷ்
63. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு 
64. ரோல் மாடல் - வெ. நீலகண்டன். 


Related Posts Plugin for WordPress, Blogger...