எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கூட்டுப் புழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூட்டுப் புழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 நவம்பர், 2017

கூட்டுப் புழு.

உனக்கேன்
இந்த
வண்ணத்துப் பூச்சிக் கனவுகள்.

நீ
ஆணாகவோ பெண்ணாகவோ
ஆசைப்படலாமா ?
ஏன் பிறந்தாய் ?
அவதிப்படு.

உனக்குள்ளே
கூடு கட்டு இன்பமாய்.
கூட்டுப் புழுவிலே
கொல்லப்படுவாய் எனத் தெரிந்தும்
கூடு கட்டு
உருப்படாமல் போ

மனசைக் கழட்டி
விட்டெறிந்து விட்டுச்
சும்மா கிட.

உனக்கேன் மனசும்
கனவும் இன்னொண்ணும்.

அரைக்குக் கோவணமில்லை
போர்வைக்குப் பேராசையா ?

-- 82 aam varuda diary
Related Posts Plugin for WordPress, Blogger...