மனசு:-
ஜன்னலெங்கும்
படங்கள்
வாயிலெல்லாம்
வளைவுகள்
வரவேற்கும்
ஆள்
எங்கே?
வீடு
முழுக்க
சுகந்தம்
இருட்டும்
வெளிச்சமும்
திட்டுத்
திட்டாய்
குளிரும்
கதகதப்புமாய்
சுத்தத்
தரையும்
மூலை
ஒட்டடையுமாய்
யாருமில்லையா
இங்கு.
கூட்டமும்
நெரிசலும்
சத்தமுமாய்
வியர்வையும்
ஏச்சுமாய்
வாங்கிக்கட்டி
சலனம்
அடக்கமுடியாமல்
எங்கே
ஓடிப் போனான்
இந்த
வீட்டு ஆள்.?
-- 84 ஆம் வருட டைரி.
-- 84 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))