எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 10 மே, 2014

ஸ்நேக சிரிப்புகள்



ஸ்நேக சிரிப்புகள்:-
--தேனம்மை
ப்ரியமுடன்
============
இந்தக் கவிதாயினியின் கவிதைகள்
புதிய சிந்தனையோடு உலா வருகின்றன.
பாரதியின் புதுமைப் பெண்ணாய் - கண்ணம்மாவாய் -
குரல் கொடுக்கிறது - இக்கவிக் குயில்.
இன்றின்  திருமணங்கள்  போலியாய் - பெண்ணடிமையை -
போதிக்கும்  கருவியாய் உள்ளதை ;
பறத்தலைக் கற்பிப்பதற்கன்றி
சுமத்தலைச்
சூடக் காத்திருக்கும்;
முறிந்து போகட்டும்
இந்தச்  சிறகுகள்எனச் சாடுகிறார்.
சுய சிந்தனையே சுத்தமாய் அற்றுப் போன
இந்த தேசத்துப் பிரஜைகளில் ; புதிய
பார்வையில் - புத்திசாலித்தனமாய் -
அறிவுபூர்வமாய் - அலசிப் பார்க்கிறாள் -
இந்தப் பெண்மணி, இதோ -
தாவரங்களைப் பசுமையாக்கி
மனிதம் துவைத்து
மார்க்கண்டேய வரம் எடுத்து
வெளிச்சம் பாய்கிறது.”
மனசிலிருந்து தெறித்து விழுகிற நிஜ
உணர்வுகள், வார்த்தைகளாய் வந்து விழுகின்றன.
இழத்தல்என்பது
யார்க்குள்ளூம் ஏற்படலாம்-
உனக்குள்ளும்
எனக்குள்ளூம்
பிரிவின் தரிசனங்கள் கூட
எதிர்படக் கூடாது.”
! கவிதாயினி !
உன்
கவிதை மதுவருந்த
நாளும்
காத்துக் கிடக்கும்
கோடி வண்டுகள்!
இவை-
மயக்கம் தரும்
மதுக் கிண்ணங்களல்ல:
ஞானப் பால் தரும்
மார்பகங்கள்!
ப்ரியமுடன்
மனோ.

2 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமை! வாழ்த்துக்கள்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சுரேஷ்

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...