நான் யார் ?
நான் ஒரு பெஸிமிஸ்டா ? இல்லை ஆப்டிமிஸ்டா ? அதுவும் இல்லை
பின் நான் யார் ? சுயநலவாதியா ? சந்தர்ப்பவாதியா ? பொதுநலவாதியா ? எதுவுமே இல்லை. எல்லாம்
கலந்த கலப்படமா ?
நான் கோபங்களின் குவியல். எனக்குப் புரிகின்றது. அகங்காரத்தின்
பிறப்பிடம். உணர்கிறேன். எரிச்சல்படுவதில் முதலிடம். பொறுமையற்ற தன்மை. எதற்கெடுத்தாலும்
ஒரு சின்னக் குண்டூசிக்காக அலட்டிக் கொள்ளும் குணம். இது மாறாதா. ? ஒரே சமயத்தில் எப்படி
என்னால் இரு வேறு வேஷங்களைப் போட முடிகின்றது.
மனசுள் குமுறும் எரிமலையை மறைத்துக் குளிர்வார்த்தைகளாகவும்,
மனசுள் ஒன்றுமில்லாமல் வெளிக்குச் சுடுவார்த்தைகளைக் கொட்டக்கூடியவளாகவும்.
ஒன்றுமட்டும் நிச்சயம். நான் யதார்த்தவாதியல்ல. BECAUSE I AM TAKING THINGS VERY SERIOUSLY.
ஆத்மார்த்தமாகவும் சிந்திக்கிறேன். ஆன்மத்தேடுதல் யக்ஞத்தை
அலசிப் பார்க்கின்றேன். அடுத்த வினாடியே தலைகீழாய் மாறுகிறேன். நானொரு கொள்கைவாதியல்ல.
ஏனெனில் ஒரு கொள்கையிலும் நிலைத்து நிற்க மாட்டேன். தனிக் கொள்கையும் கிடையாது. மற்றவர்களின்
திருப்திக்காக நானும் நடிக்கின்றேன். திருப்தியாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு.
-- 85 ஆம் வருட டைரி
-- 85 ஆம் வருட டைரி
3 கருத்துகள்:
அருமை அருமை
அப்படிப்பட்டவர்களால்தான்
பல்வேறு சுவைகளில் கவிதைகள் தர இயலும்
மனம் கவர்ந்த படைப்பு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சகோ :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))