நன்றி மருதாணிக்கு:-
மருதோன்றிச் செடி :-
எனக்குள்ளேயும் வேர்பரப்பிக்
கப்புவெடித்துப் பூச்சொரியும்
பயமரங்கள் ப்ரசவிக்கும்.
கையிலும் காலிலும்
பச்சையாய்க் கருத்தரித்துச்
சிகப்பாய் உமிழுமுன்னை
உதிர்க்கவே மனசில்லை.
நீ குடியிருந்தது
என் வீட்டின் வடக்கு மூலையில்
மனசின் வஸந்தமூலையில்
உன்னின் முட்களின் தலைவணங்கல்கள்
எனக்கு மட்டுமே வழங்கப்படுகின்றபோது
அடிவயிற்றின் பயச்செடிகள்
உன்னை யாரிடமும்
உதிர்த்துவிடுவாயோவெனக் கிளைவெடிக்கும்.
உன்னின் மிருதுத் துகள்கள்
உள்ளங்கையை வருடிக் கொடுக்கிறபோது
எனக்குள்ளே ஒரு குளிர்ச்சி
இரத்தத்தைச் செலுத்தும்போது
உன்னின் இந்தப் பணிவிடைகள்
தெருவோரப் பொறுக்கிகளிடமும்
செயலாற்றுமோவென்று பயக்கிளை பரப்பும்.
இழத்தல் என்பது
நண்பர்களுக்குள் ஏற்படலாம்.
உனக்குள்ளும் எனக்குள்ளும்
பிரிவின் தரிசனங்கள்கூட எதிர்ப்படக்கூடாது.
-- 85 ஆம் வருட டைரி
-- 85 ஆம் வருட டைரி
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))