செத்துப் போறதுக்குள்ளே அத்தனை மனுஷாளோடயும் கைகுலுக்கிறணும்..
இருக்குற அத்தனை புஸ்தகங்களையும் படிச்சிடணும்.
என்னோட முறைச்சிண்டு போகிறவாள், கோபப்படுகிறவாள், சிரிக்கிறவாள்,
கேலி பண்ணுகிறவாள், அன்பாயிருக்கிறவாள், அதிகாரம் பண்ணுகிறவாள், அறிவுரை சொல்கிறவாள்,
சிநேகிதமா இருக்கிறவாள் அத்தனை பேரோடையும் கை குலுக்கிறணும். சிரிச்சுடணும், ஓன்னு
கத்தணும், கலகலன்னு பேசணும்.
ஆனா யார்கூடயும் நிலையா ஒட்டிக்கப்படாது. அது அவஸ்தை, யார்
மேலேயும் ஒரு மரியாதை வைக்கலாமே தவிர மன்றாடப்படாது. நீ இப்படியா உன் குணமா இது என்று
வியந்துவிட்டுப் போக வேண்டும். ஓஹோ உன் குணம் இப்படித்தான் நான் அறிந்துகொண்டேன் என்று
போக வேண்டும். இப்படியும் ஒரு குணம் உண்டா என்று கீழ்த்தர குணத்தையும் அறிந்து கொள்ள
வேண்டும். நான் கேரக்டர் அனாலைசிஸ் பண்ணப் போறதில்லை. சும்மா அத்தனை பேரோடயும் இன்வால்வ்
ஆகிண்டே போயிண்டே இருக்கணும்.
உலகத்துல இருக்குற அத்தனை புஸ்தகத்தையும் படிச்சிறணும். அத்தன
இடத்திலும் ஓடியாண்டு விடவேண்டும். ஒரு எடத்துலயும் நெலையா இருக்கப்படாது. அத்தனை எடத்து
மண்ணையும் கையில கொட்டி வெளையாடணும். அவ்வளௌ ஆத்திலேயும் நெனைச்சவுடனே குதிச்சு நீந்திரணும்.
அத்தனை மலையிலயும் ஓடிப்பிடித்து விளையாடிவிட வேண்டும். அத்தனை மேகத்தையும் தொட்டுவிட
வேண்டும்.
அத்தனை (எழுத்தாள) மனுஷனோட ஐடியாவையும் புரிஞ்சுக்க வேணும்.
என்னிடம் இல்லாத நல்ல குணத்தை எல்லாம் நல்ல பண்பை எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். அத்தனை
மனுஷன்களோட பண்பாடு, பழக்க வழக்கம், நடைமுறை வாழ்க்கை அத்தனையையும் தெரிஞ்சுக்க வேணும்.
ஹூம் அப்புறம் என்ன வயசான காலத்துல இனிமே ஓட முடியாது என்னால
அப்பிடீங்கற நெலைமையில மன்னார்குடி போய் ஆனந்த விநாயகரையும், ராஜ கோபாலனையும் தினம்
தினம் நடந்து போய் சேவிச்சிண்டு வரணும்.
-- 80 ஆம் வருட டைரி :) :) :)
-- 80 ஆம் வருட டைரி :) :) :)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))