அது நிச்சயம் :-
நீங்களெல்லாம் நீங்களாக
மாறும் நேரத்தில்
நான் நானாக இருக்கப் போவதில்லை.
குழப்ப முடிச்சுக்களும்
நெற்றிச் சுருக்கங்களும்
பரட்டைத் தலையுமாய்
உடைந்த வளையல்களைப் பொறுக்கிக்கொண்டு
குப்பையைத் தோண்டிக்கொண்டு
கந்தல்களைச் சுற்றிக்கொண்டு
எத்திப்போன ஊத்தைப்பிடித்த பல்லிளிப்புகளால்
ஒரு உலகத்தை உருவாக்கி சஞ்சரித்துக்கொண்டு
தனிமொழி பேசும் சிறந்த பைத்தியநாயகியாய்
உலகத்தை மதிக்காத அறிவுஜிவித
ஒளிகொண்ட கண்களுடன்
கல்லடிபட்டு கதறிக்கொண்டு
அழுதுகொண்டு சிரித்துக்கொண்டு
சட்டையைக் கிழித்துக்கொண்டு
ஓடிக்கொண்டே இருப்பேன்
அது நிச்சயம்..!!!
---- ஹிஹிஹி 82 ஆம் வருட டைரி
---- ஹிஹிஹி 82 ஆம் வருட டைரி
2 கருத்துகள்:
நன்றி நாகேந்திர பாரதி
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))