இது தெய்வசித்தம்.
இது அவன் சித்தம்தான்.
அதனால்தான்
இலட்சாதிபதிகள் கோடீஸ்வரர்களாகவும்
குடிசைவாசிகள் ஓட்டாண்டிகளாகவும் ஆகின்றார்கள்
இது அவன் சித்தம்தான்.
அதனால்தான் விதை ஒன்று ஊன்றச்
சுரை ஒன்று முளைக்கின்றது.
இது அவன் சித்தம்தான்.
அதனால்தான் கொசுமந்தைகள்
கொம்மாளமிடுகின்றன.
எறும்புப் புற்றுகள் இடிந்து போகின்றன.
இது அவன் சித்தம்தான்.
தாகவிடாயால் நாவரண்டுபோய்
இறப்பது ஒருபுறமிருக்க,
மிதமிஞ்சிய ( செல்வ )அணைகள்
உடைப்பெடுத்ததால்
நிவாரணம் தேடிப் பரதேசிகள்.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))