எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

பௌர்ணமி :- நான் விரும்பும் கவிஞன்.

நான் விரும்பும் கவிஞன்:-

தீஞ்சுவைப் பாலெடுத்து
நறுஞ்சுவைத் தேன் கலந்து
பழச்சாறும் ஊற்றிக் கொடுத்தாலும்
புளிக்குதென்பேன்
கவிஞன் கண்ணதாசனின்
தமிழ்ப் பால் குடித்து வளர்ந்த காரணத்தால்.

உணர்ச்சிகள் அனைத்திற்கும்
உரையெழுதியவன்
வாழ்வைக் கவிதையாக்கினவன்
கவிதையை வாழ்கையாக்கினவன்

அவனின் சொற்துப்பலில்
ஊர்களின் பெயர்கள் கூட
வாழ்க்கையின் வரைபடம் காட்டும்

கவிதைக் கூட்டில்
அவனொரு இராணித் தேனி

அவனொரு வித்யாசமான
வானவில்

சிவப்பும் பசுமையும்
நிர்மலமும்
கவிச்செருக்கும் காதலும்
அடக்கமும்
அவனுள்ளும்
அவன் கவிக்குள்ளும் அடக்கம்

மனவாசத்தையும்
வனவாசத்தையும்
ஒருங்கே காட்டின
முரண்பாடு அவன்.

நதியின் ஓட்டத்தோடு
செல்வதே சிறுமீன்களின்
பண்பாயிருக்க
எதிர்நீச்சல் போட்ட
சுறாமீன் இவன்

முகஸ்துதி பாடுவதே
முதல் ஆகக் கொண்ட
மனனக் கவிஞர்களுள்
அடிபணியாத
ஆசு கவி இவன்

இன்றைய கவிஞர்கள்
இசைக்கென
எழுத்தைக் கோர்க்க
கவிப்பிரவாகத்தில்
இசையைக் கூட்டியவன் இவன்

எழுத்துலக வானில்
இவனொரு இராஜாளி

இவன் வளர்தலும்
தேய்தலும் இல்லாத
நிரந்தர சித்ரா பௌர்ணமி.

-- 84 ஆம் வருட டைரி. 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...