கறுப்புக் காயத்தோடு திரியும் மேகத்துணுக்குகள்
வெறுமையைச் சூடிக்கொண்டலைந்தன.
மகரந்தப் பையை முகர்ந்து பார்க்கும் காற்றும்
வெறுமையைச் சுமந்துகொண்டு வந்தது.
ஹாஸ்டலோரத்தில் டின்னைப் பார்த்து
நாக்கைச் சுழற்றி
கிட்ட நெருங்கிய நாயும்
டின்னின் வெறுமைகண்டு மனம் கசந்தது.
பனைமரங்கள் பச்சைக்காயை உதிர்த்துவிட்டு
ஃப்ரியாய் நின்று தலையைச் சிலுப்பின.
மரங்கள் ஜன்னலோரத்துக் கரங்களை
வெட்டிக்கொண்டு வெறுமையாய்ச் சிரித்தன. !
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))