காயங்கள் :-
வானின் காயங்கள்
கறுப்பு மேகங்கள்
மண்ணின் காயங்கள்
மலட்டு பாகங்கள்
நிலவின் காயங்கள்
நிலையில்லா அலைச்சல்கள்
காலக் காயங்கள்
இருளின் பூசல்கள்
வெளிச்சத்தின் காயங்கள்
வெற்றுநிழற் பிம்பங்கள்
காலையின் காயங்கள்
உறையும் குளிர்த்துளிகள்
மாலையின் காயங்கள்
மஞ்சள் பரவல்கள்
மலையின் காயங்கள்
மடிந்து வீழும் மடுக்கள்
உறவின் காயங்கள்
உரசல் பேதங்கள்
உணர்வின் காயங்கள்
உணராத உள்ளங்கள்
கனவின் காயங்கள்
கசங்கிய கண்விழிகள்
மனதின் காயங்கள்
நிரந்தர சூன்யங்கள். !
-- 85 ஆம் வருட டைரி.
-- 85 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))