சுமை 2. :-
சின்னச் சின்னச் சுமைகள்.
இமை கண்ணுக்குச் சுமையா
என நினைத்துத்தான்
இவள் இக்கட்டுக்களை எல்லாம்
இன்முகத்துடன் துடைத்துக் கொண்டிருந்தாள்.,
மாதம் ஒண்ணாம் தேதி மூலம்.
அன்று மட்டும் இவளுக்கு
ஆஃபீஸ் வாசலில் வரவேற்பு நடக்கும்.
வாசற்படியில் காப்பி தவங்கிடக்கும்.
கைப்பை செல்லமாய்ச் சிணுங்கும்.
மாமன் மாமிக்குக்
கொட்டிக் கொடுத்தபின்
கொழுந்தன் கொழுந்திக்கு
விரும்பியதை வாங்கியபின்
கணவனிடம் மிச்சத்தைச்
சொச்சத்தை ஒப்படைத்துவிட்டுப்
படுக்கும்போது நினைவு வரும்
“தனக்கு ஒரு செருப்பு வாங்கவேண்டும் “
காலையின் அவசரத்தில்
அலுவலகம் ஓடிக்களைத்து
வீடு திரும்பும்போது
மனசு மறந்துபோகும்
செருப்பு வாங்கவேண்டுமென்பதை.
தியாகிக்கிறோம் என்பதை உணராமலேயே
தன்மீது சுமத்தப்பட்ட
சுமைகளுக்கு வருத்தப்படாமலேயே
இவளின் மனம் அமைதித் தவம்
செய்து கொண்டிருக்கும்.
-- 84 ஆம் வருட டைரி.
-- 84 ஆம் வருட டைரி.
3 கருத்துகள்:
பலரது வாழ்க்கைச்சுமை இப்படித்தான் சகோ...
ஆம். சரியா சொன்னீங்க. நன்றி கில்லர்ஜி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))