சுமை. 1 :-
இது
மனக்குருவியின் பட்டுச்சிறகில்
கட்டிவைத்த சுமை
மீளவும் நிறுத்தவும் தெரியாமல்
மாட்டிக்கொண்ட அவஸ்தை.
அம்மா இறந்தபின்
ஆசைக்குப் பாத்தியதையான
அருமைத் தங்கை
மனைவி மயக்கத்தில்
அவனுக்குப் பெரும் சுமை.
மீளநினைத்தான் இவன்.
எப்படி மீள்வது. ?
பிடிக்காத தங்கை
கைபட்டால் குற்றம்
கால்பட்டால் குற்றம்.
மறுநாள் காலை.
அவளைச் சுமக்கப்பிடிக்காத
அந்தக் கிணறு
தன்னுள் மிதக்கவைத்து
வெளித்தள்ளியது சுமையை.
--82 ஆம் வருட டைரி
--82 ஆம் வருட டைரி
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))