சுமை 3:-
சுமை சுமையாம்.
தாய்க்குப் பாரமாய்த்
தவழும் குழந்தை
தங்கச் சுமை.
தங்கை
தனயனுக்குக்
கடமைச் சுமை.
மனைவி அவனுக்கு
உரிமைச்சுமை.
மலர்
கொடிக்குச் சுமையா
கிளை
செடிக்குச் சுமையா
சுமைகளெல்லாம்
உண்மைச் சுமைகளல்ல.
இவை தங்கப் புதையல்கள்.
-- 82 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))