எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

ப்ரியமற்ற உனக்கு:-



ப்ரியமற்ற உனக்கு:-

வேர்களே
வரண்டு போங்கள்

பாளம் பாளமாய்
வெடித்துச் சிதறுங்கள்.

நினைத்தபோது அள்ளித்தர
நான் கர்ணன் இல்லை

என்னிடம் நீர் இருக்கின்றது
ஆனால் நான் பாரி இல்லை.

சிக்குப் பிடித்து
நுனிவெடித்த முடியாய்
எண்ணெய்க்கு அழுங்கள்

நான்  பேகன் இல்லை
நீங்கள் கிளைவிரித்து ஆடுவதற்குப்
பொன்னாடை வழங்க.

வேர்களே
வாடிப்போங்கள்.

மரங்களே
மண்ணை தூஷித்து
வானை நேசித்தவர்தானே நீங்கள்.

வான் விசித்திரக்குழப்பம்
நிறைந்ததுதான் ஆனால்
மண்ணுக்கும் ரோஷமுண்டு.

எப்போதும் தாயே
பிள்ளைக்கு ஊட்டிக்
கொண்டிருக்க முடியுமா.

பூங்காவோரத்து மரப்பெஞ்சுகள் கூட
மண்ணுடன் வாஞ்சை கொள்கின்றன

வேர்களே புழுங்கிப் புழுங்கி
எங்கும் வருடி வெந்து
சாம்பலாகுங்கள்.

கருணை என்ற பதத்துக்கு
என்னகராதியில் உரையே
இல்லாமல் போய்விட்டது.

நீங்கள் தைரியமில்லாமல்
மண்ணில் ஒளிந்திருக்கும்
வாலிபப் பையன்கள்.

நீங்கள் பின்னல்போடும் வேளைகளில்
ஒரு வேளை அடுத்த புல்லின்
மெல்லிய வேர்களைத்
தொட நேரலாம்
அது ஏமாந்த சோணகிரி

என் அன்பால்
பருத்திருக்கும் அவற்றையும்
உறிஞ்சிப் போடாதீர்கள்,
வெறுப்புடுத்த நாசகார
வெள்ளைநார் வேர்களே. !

இப்படிக்குப் ப்ரியம்தரத்
தயாராயில்லாத நான்.

-- 82 ஆம் வருட டைரி

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கருணையை ஊட்டிக் கொண்டே இருக்கலாம்...

Thenammai Lakshmanan சொன்னது…

கவிதைக்காக எழுதியது சகோ :)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...