எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 19 பிப்ரவரி, 2015

என் சுயம் எங்கே முடங்கிக்கிடக்கிறது ?



என் உயிருக்கு எத்தனை நிறங்கள்
கத்திரிப்பூவாய் வயல்வெளியாய்
ஆகாயமாய் எலுமிச்சையாய்
வாழையாய் கடலாய்
என் உயிருக்கு எத்தனை நிறங்கள்.

(வேறு )

என் சுயம் எங்கே
முடங்கிக்கிடக்கிறது
உன் உயிரின்
நிறங்களுக்குள்ளா.?

மதங்களையும் நம்பிக்கைகளையும்
விடாமல் பற்றிக் கொண்டிருப்பதிலா?

நிலவையும் இரவையும்
கதிரையும் ரயிலையும்
ரசித்துக் கவிதை எழுதுவதிலா ?

இந்துமதியையும் சிவசங்கரியையும்
நுனிவிரலால் நகர்த்திவிட்டுப்
பாலகுமாரனையும் ஜெயகாந்தனையும்
புரட்டிப் பார்ப்பதிலா ?

ப்ராப்ளம்ஸுக்கு சொல்யூஷன்
கொடுக்கப்படும்போது (வகுப்பில்)
தனியாக ஸெல்ஃப் அனலைஸ்
செய்து கொள்வதிலா ?

எதையும் ஆகர்ஷிக்க முடியாதபோது
அலட்சியப் புன்னகை சிந்துவதிலா ?

நாற்காலிக்கும் மேசைக்கும் நடுவில்
காலை நுழைத்துக் கையை முட்டுக்கொடுத்து
சொல்லடி படும்போது எனக்கு வலிக்கவில்லையென
முகம் மலர இருப்பதிலா ?

பாடம் கவனிக்காமல்
நோட்டுப் பின்புறம்
மனக்கிறுக்காய்
உளறலாய் எழுதுவதிலா ?

எதற்கெடுத்தாலும் மனசுள்
துன்பப் பறவையின் விசை
முடுக்கிக்கொண்டிருப்பதிலா ?

என்னுடைய சுயம்
எங்கே முடங்கிக் கிடக்கிறது ?

-- 83 ஆம் வருட டைரி. 

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மையிலே தெரியலைங்க... நீங்களே சொல்லிடுங்க pl... ஹா... ஹா... (அ)லட்சியப் புன்னகை...!

KILLERGEE Devakottai சொன்னது…

அருமை வாழ்த்துகள் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

ஹாஹா கருத்துக்கு நன்றி தனபாலன் சகோ :)

நன்றி கில்லர்ஜி சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...