எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 7 பிப்ரவரி, 2015

நேசமுள்ள உனக்கு:-



நேசமுள்ள உனக்கு:- ( விஜிக்கு )

குழப்பப்பூவைச் செருகிக்கொண்ட
வேதப் புத்தகம் நீ.

இலையுதிர் காலத்தில்
தப்பிப் பிறந்த வஸந்தமுகூர்த்தம் நீ.

அதனால்தானோ உன் நிகழ்வு
தெரியாமல் போனது.

இன்னும் எத்தனை நாள்
மூடியபுத்தகமாக இருக்க உத்தேசம்

அமைதிக்குளத்தில் அடுக்கடுக்காய்க்
கல்லெறிந்துதான் பார்க்கிறேன்.

அங்கே சலன அலைகள் ஏன்
நீர்த்தெறிப்புகள் கூட இல்லை.

இனிப்பைத் தரக் கற்றுக்கொண்ட நீ
உன் இதயத்தைத் திறந்து காட்ட
எப்போது கற்றுக்கொள்ளப் போகின்றாய்.

வார்த்தைகளால் விளையாடத் தெரியாது
ஏன் பேசவுமா கூடாது.

இன்னும் எத்தனை நாள்தான்
ஓடி ஒளிவாய் ?

உன்னை ( உள்ளத்தை) ஊடுருவிப் பார்க்கும்
ஜாதியல்ல நான்
உன் கூடப் பிறந்த ஜாதிச்சரம்தான்.

எந்தப் பொறிக்குள் மாட்டப்படுவோம்
என்று இந்த ஓட்டம்.?

மௌனமாய் வந்து மௌனமாகவே
சென்றுவிட உத்தேசமா
விடமாட்டேன் உன்னை

உதறிப்போட்டாலும் உன்
பின்னாலேயே வரும் நிழல் நான்

ப்ரியங்களுடன்.

2 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...