எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அவள் கையாலாகாதவள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவள் கையாலாகாதவள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 அக்டோபர், 2015

தவயோகி

தவ யோகி :-



வேலையற்ற விடலைப் பையன்கள்
ஞாயிற்றுப் பொழுதுகளில்
சாயங்கால வெய்யில்களில்
க்ரிக்கெட் விளையாடியபோது
ஐ ஏ எஸ் வீட்டு
மாடிச் சன்னல் கண்ணாடி
தற்பெருமை பேசிக் களித்தது.
பார்த்தாயா என் தவவலிமையை.
இந்தப் பந்து ஊர்வசி என்
தவத்தைக் கெடுக்க
எத்தனைவகை நாட்டியமாடினாலும்
அசையாத தவயோகி யானென்று
இதைக்கேட்டு ஜன்னல் கம்பிகள்
தம்முள் சிரித்துக்கொண்டன
மௌனமாய்.

-- 85 ஆம் வருட டைரி 

Related Posts Plugin for WordPress, Blogger...