எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 26 ஜூன், 2015

தூரத்துத் தென்னைகள்



தூரத்துத் தென்னைகள்
செல்லமாய் முகம் சிணுங்கும்
ஜன்னலின் இடைவழியாய்
வெய்யில் கிளைகளுக்கு
மஞ்சள் க்ரீம் பூசும்
கிணற்றோரம் கால்புதைத்து
மாடிச்சுவரில் முகம் பதிக்கும்.
மனசுக்குக் கவசமணிந்து
இனிப்பைச் சுமந்து நிற்கும்
மழைவரும்போது
சிறுவனாய் உள்ளங்கையில்
நீர்பிடித்துச் சுவற்றில்
முகத்தில் அடித்து விளையாடும்
திசைமாற விரும்பாமல்
நாணலாய் வளையாது
காற்றில் சுயமாய் நிற்கும்.
என்னவோ வெட்டி முறித்தாற்போல்
அடிக்கடி நெட்டி முறிக்கும்
நகரும் மேகங்களை
பக்கத்துச் செடிகளில் சொரியும்பூக்களை
ஜிகினா நட்சத்திரங்களை
மழைத்துளிகளை எண்ணிக்கொண்டு
ஜாலியாய்ப் பொழுது போக்கும்
ஹூம் கொடுத்து வைத்தவை.

-- 85 ஆம் வருட டைரி

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தென்னையாய் மாறி விடலாம் போல...

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் !

அழகிய கவிதை தென்னங் கீற்றில் தென்றல் வந்து மோதிச் செல்கிறது

தொடர வாழ்த்துக்கள்
தமிழ்மணம் முதல் வாக்கு

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமை! வாழ்த்துக்கள்!

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா ஆம் டிடி சகோ :)

நன்றி சீராளன். :)

நன்றி தளிர் சுரேஷ் :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...