எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 அக்டோபர், 2013

காடு வெட்டிப் போட்டு.

முந்திரிக்காடுவெட்டிப் போட்டு
வீடு கட்டினோம்.
கரம்பைக் கல் உடைத்து
மாளிகை அமைத்தோம்.

பர்மாவிலிருந்து தேக்கு
ஆத்தங்குடிக் கல்
பித்தளைத் தாழ்வாரம்
பெல்ஜியம் கண்ணாடிகள்
ரவிவர்மா ஓவியங்கள்.

மலேயாச் சாமான்கள்
வெள்ளி சுமந்த பெட்டகங்கள்
பட்டாலையிலிருந்து இரண்டாங்கட்டுவரை
ரத்தினக் கம்பளங்கள்

சிறு பிள்ளையில்
வளவைச் சுற்றிக்
கீழ்வாசலில் இறங்கிக்
கல்லா மண்ணா விளையாடி இருக்கிறோம்.

ஒரு நாள் செட்டிநாட்டுக் கோட்டைகளும்
கல்லாய் மண்ணாய் மூடிக் கிடக்குமென்றோ
ப்ளாட்டுவீடுகளாய் ஆகுமென்றோ
கிஞ்சித்தும் கவலையில்லாமல்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// கல்லா மண்ணா விளையாடி இருக்கிறோம்... //

இனிய விளையாட்டு ஞாபகம் வந்தது சகோதரி... வாழ்த்துக்கள்...

உஷா அன்பரசு சொன்னது…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால் சகோ

நன்றி உஷா அன்பரசு. உங்களுக்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...