பொய்முகங்கள்
உரித்துப் பார்க்கக்
கண்ணீர் வடிந்தது.
உரிக்க உரிக்க
ஒன்றுமில்லாமல்
கண்ணீரின் எச்சம்காய
மிச்சமேதுமில்லாத
ஒன்றை விட்டுவிட்டுப்
போயிருக்கலாம்
சுருங்கும் தோல்களாவது
பற்றி இருந்திருப்பார்கள்
சூதையே கவசமாய்ச்
சுற்றிக் கொண்டிருந்தவர்கள்.
கவனப் போலிகள்கூட
உப்புத் தடங்களாய்
உறைந்திருக்கின்றன.
உள்ளக் கொள்முதல்.
உரித்துப் பார்க்கக்
கண்ணீர் வடிந்தது.
உரிக்க உரிக்க
ஒன்றுமில்லாமல்
கண்ணீரின் எச்சம்காய
மிச்சமேதுமில்லாத
ஒன்றை விட்டுவிட்டுப்
போயிருக்கலாம்
சுருங்கும் தோல்களாவது
பற்றி இருந்திருப்பார்கள்
சூதையே கவசமாய்ச்
சுற்றிக் கொண்டிருந்தவர்கள்.
கவனப் போலிகள்கூட
உப்புத் தடங்களாய்
உறைந்திருக்கின்றன.
உள்ளக் கொள்முதல்.
3 கருத்துகள்:
சரி... மிகச்சரி....
கருத்துக்கு நன்றி டிடி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))