எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 10 செப்டம்பர், 2014

நிறைகளின் குறைகள்.



நிறைகளின் குறைகள்.

பாலைவனத்தின் வீரியத்திலே
வெந்துகொண்டிருந்த என்னிடம்
சோலைவனத்தின் சுகத்தை
ஏன் காண்பித்து மறைக்க வேண்டும்.
வார்த்தை நெருப்புத் தழல்களுக்குள்
மனம் கரித்துண்டங்களாய்
மாட்டிக்கொண்ட கோலம்
அமாவாசைக் காலம்.
திடீரென்று ஆனந்தா நீலத்தில்
கனவுப் பூக்களின்
கள்ளமில்லாச் சிரிப்பு.
கைக்கொட்டலுடன்
பௌர்ணமி நிலவின்
உல்லாசச் சிலிர்ப்பு.
வார்த்தைகளுக்கு
இதற்கு மேலும்
சக்தியில்லை. சித்தரிக்க.
ரோஜாப்பூக்குவியல்களி
சித்திரத்தில் எழுத முடியவில்லை.
இந்தச் சந்தோஷத்திற்கு உவமை
குழந்தையழகல்ல.
ஏனெனில் இது
வயிற்றில் வளரும் கரு.
அதன் உருவம் எப்படி இருக்கும்
திடீரென ஒரு குறைபாடு.
ஓ. இது தேய்பிறை.
பிறகு அமாவாசை.
வளர்ச்சியில் மகிழ்ந்த மனத்தால்
வீழ்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை.
ஓ இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
ஏனெனில் இது நிஜத்தின் தரிசனம்.

-- 82 ஆம் வருட டைரியிலிருந்து :) 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...