எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
”அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் “ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
”அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் “ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 ஏப்ரல், 2016

”அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் “



”அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழ் “ என்பர்.
ஆனால் என் அன்பிற்கு , 
ன்பின் எல்லைக்கு
உன் வரையில்தான் தாழ் இல்லை !

ஆரம்பமும் உன்னிடம்,
அடங்குவதும் உன்னிடம்..
உன் உண்மை அன்பு
எனக்கு மட்டும் சொந்தமானது.

என் உள்ளத்தில் அன்றுமுதல்
இன்று வரை இந்த நிமிடம் வரை
என்னை நீதான் ஆட்கொண்டு இருக்கிறாய் !

என் சுயநலமான அன்பை
அன்பின் வெறித்தனத்தை
வெறுக்காதே !
என்னை வெறுக்கக் கற்றுக் கொள்ளாதே. !

இனியும்
இந்த உடல்
நெருப்பில் மூழ்கும்வரை
சுவைத்தறிந்த
உனதன்பை மறக்காது. !

எனக்கு இனியும்.
பரிசுத்தமான,
எனக்கே உரிய,
எனக்கு மட்டுமே உரிய
தூய அன்பைப்
பரிசாக வைத்திரு. !

-- 83 ஆம் வருட டைரி

Related Posts Plugin for WordPress, Blogger...