எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வெய்யில் காய்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெய்யில் காய்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 டிசம்பர், 2016

வெய்யில் காய்தல்.

வத்தலும் ஊறுகாயும்
காய்ந்த நடுவாசலில்
ஒரு நாய்க்குட்டியைப் போலச்
சுருண்டிருந்தாள் அவள்.
கைகளும் கால்களும் மடிந்து
உடல் ஒரு கம்பிளியாய் நெகிழ்ந்திருந்தது.
காலையும் மாலையுமற்ற குட்டை மதியத்தில்
குழியாடியாயும் குவியாடியாயும்
அவள் முதுகில் குதித்து
நடுவாசலில் தப்பித்து ஓடிக்கொண்டிருந்தது வெய்யில்.
காய்ச்சலில் உஷ்ணத்தோடு
நீண்ட பெருமூச்சை
இழுத்துத் திருப்பும் கணம்
அவள் நோக்கி நீண்ட
பாட்டியின் கைகளுக்குப் புலப்பட்டது
அவள் வெய்யிலைக் காயவைத்துக் கொண்டிருப்பதாக.

Related Posts Plugin for WordPress, Blogger...