எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வகுப்பறையில் நான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வகுப்பறையில் நான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 28 டிசம்பர், 2015

வகுப்பறையில் நான்.



வகுப்பறையில் நான்:-

வானமும் பூமியும்
மேகத்தை மழையாய்ப் பிய்த்துச்
சண்டையிட்டுக் கொண்டிருந்த
காட்சியைக் கடைக்கண்ணால் இரசிக்கும்போது
இராமனும் இராவணனும் சீதைக்காகச்
சண்டையிட்டது எந்த இதிகாசம் என்ற
தர்மசங்கடமான கேள்வி ஏன் ?
மரராணிகள் தலைக்குக் குளித்து
உலாத்திக் கொண்டிருந்த
அழகை அனுபவிக்கும்போது
குமரகுருபரரின்
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில்
நீராடற்பருவத்தை விளக்கச்சொல்லி
விபரீதக் கட்டளை விதிப்பதேன் ?
சே..! இயற்கையை இரசிக்கத்  தடை விதிக்கும்
இந்த வாழ்க்கை சுத்த போர்.

-- 83 aam varuda diary

Related Posts Plugin for WordPress, Blogger...