எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மலரத் துடிக்கும் மொக்குகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலரத் துடிக்கும் மொக்குகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 ஜூலை, 2016

மலரத் துடிக்கும் மொக்குகள் :-



மலரத் துடிக்கும் மொக்குகள் :-

ஓ.! அடிமைத் தளைகளே.!
உங்களால் என் கரங்களைத்தான்
கட்டிப்போட முடியுமே தவிர
விடுபடத்துடிக்கும் வீரியப்புறாக்களையல்ல. !
ஏ. ! உலகப் பள்ளமே .!
உன்னுள் புதைந்துகிடப்பது
முட்காம்புமட்டுதானென நினைத்துவிடாதே. !
அதற்குமேல் பூத்துச் சிரிப்பது
இளமை ரோஜா மொக்குகள். !
உன் வெம்மையால் அவற்றைப்
பொசுக்கலாமெனக் கனவு காணாதே. !
ஏனெனில் அவை இதழ் விரிப்பது
நினைவுச் சந்தோஷ வெளிகளில் !
அக்கினிப் பாள வெடிப்புக்களில் !
ஏ வீரியப் புறாக்களே !
உங்களின் செயல் வழிகளில்
வஸந்தத்தை மட்டுமே எதிர்பார்க்காதீர்கள்.
பாசம் எதிர்ப்புப் புயல்களும்
உங்களின் கடமை வழிகளில்
குறுக்கீடு செய்யும்போது
எதிர்நீச்சலிடக் கற்றுக் கொள்ளுங்கள்.
ஏ ..! வெடிப்புப் ப்ரதேசமே. !
வயோதிகத்தனத்தால் முணுமுணுக்காதே. !
இந்தப் புதிய மொட்டுக்களின்
முன்னேற்ற முயற்சிகளுக்கு
முதலுதவி முதல் உதவி செய். !
ஏ.. ! அடக்கப்பட்ட கரங்களே. !
வாழ்வின் இருட்டு வெளிகளில்
உழன்றது போதும்.
உடையுங்கள் தளைகளை.
புறப்படுங்கள் விடுதலைப் புலிக.
உண்மையின் ஜீவாதார ஒளியைக் காண. !!!

-- 85 ஆம் வுடைரி

Related Posts Plugin for WordPress, Blogger...