எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பூர்வஜென்ம வரவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூர்வஜென்ம வரவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 மார்ச், 2016

பூர்வஜென்ம வரவு.



நீ நீயாக இல்லை
நான் நானாக இல்லை

நம்மிருவரின்
”நான்”களையும் மீறிய
தெய்வீக அற்புதம்
எப்படி விளைந்தது.?

பூ மலர்ந்தது எப்ப?
பொழுது விடிந்தது எப்ப.?
நம்மிருவரின் உள்கிடந்த
அன்பு வெடித்துக்
கிளம்பியது எப்ப.?

விதை விழுந்தது எப்ப.?
மழை பொழிந்தது எப்ப.?
ஒன்றும் உணரக் கிடைக்காமல்
விருக்ஷம் கிளைத்தது எப்ப.?

என்னன்னமோ நிகழ்ந்தது.
மனசெல்லாம் திளைந்தது.
மகிழ்ச்சியே முகிழ்ந்தது.
பூர்வ ஜென்ம வரவு. 


-- 86 ஆம் வுடைரி.

Related Posts Plugin for WordPress, Blogger...