எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பாவனைப் பூனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாவனைப் பூனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 ஏப்ரல், 2022

பாவனைப் பூனை

கால்மேல் கால் போட்டு
அமர்ந்திருந்தான் ஒருவன்
அவனுடைய பாவனைகளைக்
கவனிக்க தொடங்கினேன்.
கண்ணாடிப் பார்வைக்குள்
காகிதத்தை மேய்ந்து கொண்டிருந்தான்.
மோவாயில் கை வைத்திருந்தான்
இன்னொருவன்.
செல்போனைத் தேய்த்துக் கொண்டிருந்தாள்
ஒருத்தி.
கூரிய பார்வையில்
கூட்டத்தினரைப் பார்த்துக் கொண்டிருந்தான்
மற்றொருவன்.
மா மரத்தின் பக்கத்தில் உள்ள
மதிலில் அமர்ந்து
எங்கள் அனைவரின் பாவனைகளையும்
பார்த்துக் கொண்டிருந்தது
ஒரு பூனை.
 
Related Posts Plugin for WordPress, Blogger...