எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நட்பின் இழப்பு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பின் இழப்பு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 செப்டம்பர், 2011

அனைத்தும் பொய்யோ..?

முடிந்துபோன கதை ஒன்றின்
இரண்டாம் அத்யாயம்
ஆரம்பமாகி விடுமோ..

மீண்டும் முன்போல
சுயகம்பீரம் அழிந்து
கரைந்து போய் விடுவோமோ..

நிழலைப் பிடிக்கும் ஆவலில்
வெளிச்சத்தையே காணாமல்
போக்கி விடுவோமோ..

கால ஓட்டத்தில்
நசிந்து போகும்
பலவீன உணர்வுகள்
கலங்க அடிக்கிறதே..

அன்பு காட்டினால்
பரிசாகக் கிடைப்பதும் அதுதான்
என்ற அன்பு மொழிகள்
அனைத்தும் பொய்யோ..?
Related Posts Plugin for WordPress, Blogger...