எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
துரும்புப்புல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துரும்புப்புல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 ஜூலை, 2016

துரும்புப்புல் :-



துரும்புப்புல் :-

கரிய நீர்வீழ்ச்சியொன்று அலையாடுகின்றது
மீன்களைப் போலப் பேன்கள் நீந்திக்கிடக்கின்றன.
கூந்தல் அலைகளைப் போலாகிறேன்.

கரிய நீர்வீழ்ச்சியொன்று கட்டிப்போடுகின்றது
மீன்களைப் போலக் கண்கள் துள்ளிக் குதிக்கின்றன.
கண்களின் கட்டவிழ்க்கத் துடிக்கிறேன்

கரிய நீர்வீழ்ச்சியொன்று கடந்துபோகின்றது
வளைவும் நெளிவும் கொண்ட காட்டாறாய்ப் பாய்கிறது
கரியவளிடமிருந்து தப்பவழியின்றி மூழ்குகிறேன்

கரிய நீர்வீழ்ச்சியொன்று கண்ணாமூச்சியாடுகின்றது
எங்கே எங்கேயெனத் துரும்புப்புல் பூக்கிறது.
செல்லரித்த இரும்பாய் சுயம்கரைந்து போகிறேன்.

-- 85 ஆம் வுடைரி

Related Posts Plugin for WordPress, Blogger...