எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தனிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தனிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 மார்ச், 2016

தனிமை.



LONLINESS:-

நான் தனித்திருக்கிறேன்.
பனிப்பாறைகளுக்குள்
வால்ரஸ் குட்டியாய்.
ராஜபுதனத்து ஒட்டகமாய்

எங்கிலும் யாவற்றிலும்
எதையோ தேடித் தேடி
ஒருமையை உணர்ந்து
என்னை இருத்தியிருக்கிறேன்.

ஒற்றைக் கொசுவாய்ச்
சங்கீதம்பாடி,
வழிதவறிய எறும்பாய்
நர்த்தனம் ஆடி
ஊரெல்லாம் ஓடி
எல்லாம் உணர்ந்து மீண்டு
தனித்திருக்கிறேன்.

விதைப்பு விதைத்து
அறுவடை பண்ணி
மீண்டும் தரிசாகி
விதைப்புக்கு இருக்கும் காத்து

நானோ நீயோ அன்றி அதுவோ
ஏதோ ஒன்று காத்தும்
தனித்தும் இருக்கிறது.

--- 85 ஆம் வுடைரி. 

Related Posts Plugin for WordPress, Blogger...