எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ட்ரெயின் விளையாட்டு.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ட்ரெயின் விளையாட்டு.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 மே, 2013

ட்ரெயின் விளையாட்டு..

குழந்தைகளின்
ட்ரெயின் விளையாட்டில்
கும்பகோணம் வந்ததும்
சென்னை வந்துவிடுகிறது..

காசு செலவில்லாமல்
கேட்டில் கால்வைத்துந்தி
காஞ்சிபுரமும் கன்யாகுமரியும்
சென்று வருகிறார்கள் குழந்தைகள்.

ட்ரெயின் விளையாட்டில்
எல்லாக் குழந்தையும்
சொந்த ஊர் சொல்லி ஆட
சென்னைக் குழந்தை மட்டும்
தயக்கமாய் தலைசாய்த்துச்
சென்னை என்கிறது.

எங்க ஊருக்கே வாடா நீயும்
என மற்ற குழந்தைகள்
சென்னைக் குழந்தையைத்
தோளணைத்து உந்தும்போது
இன்பமாய்க் கிறீச்சிடுகிறது
கேட்டும்..சேர்ந்து...

Related Posts Plugin for WordPress, Blogger...