எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
குப்பைப்பூ நதியும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குப்பைப்பூ நதியும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 செப்டம்பர், 2016

சூரியத் துளிரும் குப்பைப்பூ நதியும்.

வெளிச்ச இலைகள் உதிர்த்து
இருள் மரத்துள் ஒடுங்கி
விடியல் துளிராய் அரும்புகிறது சூரியன். 



வறண்டிருந்த மணல் மீது
பெய்து தீர்க்கிறது மழை
சுமந்ததை சுமத்தி
சுழற்றிச்சுழற்றி
ஜலபானம், ஜலக்ரீடை.

வண்டல்கள் கலங்க
தன் கரைகளைத் தேடி
குப்பைப் பூக்களோடு
காட்டுவேகத்தில்
அலமலங்கச் செல்லுமது
முன்னொரு காலத்தில்
நதி இருந்த இடமாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...