எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
குடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

குடம்.:-



குடம்.:-

கோயில் குளத்தில்
மண்பூசித்
தண்ணீர் தின்றுவரும்
அறியாமை.

கல்லில் இடுப்பில்
இடுப்பில் கல்லில்
இடுங்கி நசிந்து
முதிர்முத்திரை
மாட்டிக்கொள்ளும்.,
அனுபவம்.

சேறுகழுவிப்
பாதி நிறையும்போது
காற்று விலக்கி சத்தமிட்டு
நிறைதல் காட்டிக்கொடுக்கும்.,
அகங்காரம். 

பளபளப்பணிந்து
உடல் கலக்கி
வாயில் ஜொள் வழிக்கும்
அவசரம்.

மௌனமாய் நிரம்பி
சிந்துதல் இல்லாமல்
வெற்றிடம் நீர் உடுத்து
நடக்கும்
அடக்கம் அறிவு.

டிஸ்கி :- 85 ஆம் வருட டைரி.
Related Posts Plugin for WordPress, Blogger...