நாளைய தலைவர்கள்.
பொங்கல்
புகையில்
தூரத்து
நிலங்கள் நடுங்கும்.
மனநிலம்
ஞாபகச்
சருகு புரட்டும்.
நானும்
அதுவும்
அதுவும்
நானும்
கயிறும்
கதம்பமுமாய்.
நாளையத்
தலைவர்கள்
இன்றைய
அம்மணதாரிகள்
புழுதியில்
ஊர்கோலம்போக
காலத்தின்
நாள் என்னும்
எண்ணற்ற
ஆக்டோபஸ் பிடிப்புகளில்
அங்கங்கே
தீவுகளாய்.மனிதர்கள்
எலும்புக்கூட்டு
கடல்களில்.
-- 85 ஆம் வருட டைரி
-- 85 ஆம் வருட டைரி