என் ப்ரிய அப்பாவுக்கு,
என் நினைவுத் தாள்களில்
உங்கள் பிறந்தநாள்
ப்ரியத் தாமரையாய்
மலரும்.
மறக்கமுடியுமா
இந்நாளை.
நாற்பத்துமூன்று
வருடங்களாக
உங்கள் பிறந்ததினம்
வருகிறது.
என் நினைவின் கருவிலோ
புதுப்பரிமாணங்களில்
புதிதுபுதிதாய் நீங்கள்
ஜனித்துக்கொண்டே
இருக்கின்றீர்கள் அப்பா !
உங்கள் ஜனனம்
நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.
அப்பா..!
நாங்கள் ஊர்க்குருவிகளாய்த்தான்
நாங்கள் ஊர்க்குருவிகளாய்த்தான்
இருந்தோம்.
எங்களை வழிநடத்தி
உயரவைத்த
இராஜாளி நீங்கள்.
வளர்தலும் தேய்தலும்
நிலவுக்குண்டு
ஆனால்
உங்கள் அன்போ
வளர்தல் மட்டுமே அறிந்தது.
ப்ரச்சனைகள் என்ற
அலைகளுக்குள்ளும்
காற்றுக்குள்ளும் சிக்கியும்
கலங்காமல்
எங்களைக் கரை சேர்த்த
மாலுமி நீங்கள்.
அப்பா !
உங்க நினைவு
காயாத ஓவியமாய்
இன்னும் என்னுள்
புதிதாய்..
அப்பா!
உங்களைப் புகழ முயன்று
நான் தோற்றுப் போகின்றேன்.
நீங்களே ஒரு கவிதை.
உங்களுக்கும் ஒரு கவிதையா.
-- 86 ஆம் வருட டைரி.
-- 86 ஆம் வருட டைரி.